
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். இன்று முதல் தினசரி இராசி பலன்களை துல்லியமாக அறியலாம். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
தள்ளி போன காரியங்களை விரைவில் முடிக்க போகும் ராசிக்காரர்கள் யார்?
சோபகிருது வருடம் மார்கழி மாதம் 3,ம் தேதி
19-12-2023 செவ்வாய்க்கிழமை
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, அறிவாற்றலால் சாதிப்பீர்கள். பேச்சில் நிதானமும், விவேகமும் நிறைந்திருக்கும். பல வேலைகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். எதிர்ப்புகள் அடங்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, கணவன் மனைவிக்குள் வாக்கு வாதங்கள் வரக்கூடும் .எதையும் வெளிப்படையாக பேசுவது நல்லது. பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, கணவன் மனைவிக்குள் ஒற்றுமை நிலவும் குடும்பம் குதுகலமாக இருக்கும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்னைகள் சரியாகும். சாதூர்யமான பேச்சு காரிய வெற்றிக்கு உதவும். சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் அவசர முடிவுகள் தவிற்க்கவும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, தள்ளிப் போன காரியங்கள் விரைவில் முடியும். பால்ய நண்பர்களின் சந்திப்பு நிகழும் நீண்ட தூர பயணங்களை தவிர்க்கவும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். உத்யோகத்தில் கவனம் தேவை.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, அடுத்தவர்களை குறைக் கூறுவதை தவிர்க்கவும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். இழுபறியில் வேலைகள் சீக்கிரத்தில் முடியும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, நெருங்கிய உறவுகளால் நெருக்கடிகள் வரலாம். பயணங்களின் போது கவனம் தேவை. கொடுக்கல், வாங்கல் கைகொடுக்கும். தொழில், வியாபரம் சிறப்பாக அமையும்
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். நண்பர்கள் சிலர் தர்ம சங்கடத்திற்கு ஆளாக்குவர். பிரியமானவர்களின் அன்பும், பாசமும் கிடைக்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்பத்தில் சந்தோஷமான தருணங்கள் இருக்கும். ஆன்மீக ஆர்வம் கூடும். காணாமல் போன பொருள் திரும்ப கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்பத்தில் தவிர்க்க முடியாத செலவுகள் வரும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்களுடன் சின்ன மனஸ்தாபம் வரும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்ப பொறுப்புகளில் கவனம் தேவை. தெய்வ பக்தி அதிகரிக்கும். வாகன பராமரிப்பு செலவு கூடும். உத்யோகத்தில் வேலை பளு குறையும்.இன்றும் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, குடும்ப பிரச்சனை முற்றிலும் தீரும். யாரிடத்திலும் விவாதம் செய்ய வேண்டாம். வாகனங்களில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் சிறப்பாக செழிப்படையும்.
image credits: Freepik