
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
இன்று இந்த ராசிக்காரகளுக்கு உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
சோபகிருது வருடம் தை மாதம் -5ம் தேதி 19-01-2024 வெள்ளிழக்கிழமை.
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, உறவினர்களால் சில சங்கடங்கள் வரும். கணவன் மனைவிக்குள் இருந்து பகைமை நீங்கும். உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும் புதிய முயற்ச்சிகள் தவிர்க்கவும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, கணவன் மனைவிக்குள் தேவையற்ற வாக்குவாதங்கள் தவிற்பது நல்லது யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். பிரியமானவர்களின் சந்திப்பு உற்சாகம் தரும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் சந்தோஷம் மேலோங்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.தொழில் வியாரத்தில் மாற்றம் ஏற்படும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே,கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பிரார்த்தனைகள் நிறைவேறும்.புதிய வாகன யோகம் உண்டு. பயணங்களால் அலைச்சல் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே,புத்தி கூர்மையால் காரியம் ஒன்றை சாதிப்பீர்கள். குடும்பத்தில் ஆடம்பர செலவுகளை குறைக்கவும். யாரை நம்புவது என்கிற குழப்பம் வரும். பயணங்களால் புத்துணர்ச்சி ஏற்படும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு..
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். விட்டு கொடுத்து வாழவும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். யாரையும் சார்ந்து இருக்க வேண்டாம். வியாபாரத்தில் சாதிக்க முடியும்.தொழில் வியாபாரம் செழிப்பை தரும்.
சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனமும் நிதானமும் அவசியம்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். வெளிவட்டார பழக்கங்கள் விரிவடையும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும்.தொழில், வியாபாரம் செழிப்படையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பம் முன்னேற்ற பாதையில் செல்லும். பழைய பிரச்னைகளை தீர்க்க வழி பிறக்கும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் சலுகைகள் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். தேவையற்ற மனபயத்தை நீக்கவும். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.புதிய வாகன கனவு நிறைவேறும் .மருத்துவ சிலவுகள் குறையும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். மன வலிமை கூடும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும்.வீண் விவாதங்கள் முன் கோபங்களை தவிற்க்கவும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும்.உணவு விஷயத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் சிறக்கும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். பால்ய நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் சீராக இருக்கும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, குடும்ப சூழ்நிலைகள் சாதகமாக அமையும். பொருள் சேர்க்கை உண்டாகும். கடின பணிகளையும் எளிதில் முடிக்க முடியும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.தொழில் வியாபரத்தில் புதிய முதலீடுகளால் அதிக லாபம் பெறலாம்.
Image credits: Freepik
What's your reaction?
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0