
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
இந்த ராசிக்காரகளுக்கு இழுபறியான காரியங்கள் சீக்கிரத்தில் முடியும்.
சோபகிருது வருடம் தை மாதம் 6’ம் தேதி 20-01-2024 சனிக்கிழமை
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போகவும். யாரையும் முழுமையாக நம்பி ஏமாற வேண்டாம். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
தொழில் வியாபாரங்கள் மிதமாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, பெரியளவில் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். அடுத்தவர் தவறை சுட்டி காட்ட வேண்டாம். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.மதியம் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் மனக்குழப்பம் காணப்படும் அவசர முடிவுகள் தவிர்க்கவும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கான பேச்சுக்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் செழிப்படையும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே,கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும். இழுபறியில் இருந்த வேலைகள் சீக்கிரத்தில் முடியும். பயணங்களால் செலவுகள் கூடும். பெண்கள் வழியில் நன்மை உண்டு. தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, நீண்ட பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்க முடியும். பயணங்கள் திட்டமிட்டபடி அமையும். உத்யோக மாற்றம் ஏற்படும்.தொழில் வியாபாரங்கள் செழிப்படையும்.
கன்னி
கன்னி ராசி அன்பர்களே, ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புரியாத விஷயங்கள் கூட எளிதில் புரிய வரும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, கணவன் மனைவிக்குள் தேவையற்ற புகைச்சல் உண்டாகும். மூன்றாம் நபர்களால் குடும்பத்தில் நிம்மதி சீர் குலையும் உங்கள் விருப்பங்கள் நிறைவேற போராட வேண்டியிருக்கும். மனச்சுமை அதிகரிக்கும். சேமிப்பில் கவனம் செலுத்தவும். உத்யோகத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, உழைப்பிற்கேற்ப ஊதியம் கிடைக்கும். கடன்சுமைகள் சிறுக சிறுக குறையும். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்படும். வாழ்க்கை தரம் வெகுவாக உயரும். யாரிடத்திலும் பகைமை காட்ட வேண்டாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, கைகூடாத சில காரியங்கள் கூட கைகூடி வரும். நற்செய்தி ஒன்று கிடைக்கும்.அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போகவும். பண விஷயத்தில் கவனமாக இருக்கவும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.தொழில் வியாபாரங்கள் முன்னேற்றம் காணப்படும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தில் இருந்து வந்த சலசலப்புகளும் குழப்பங்களும் நீங்கும். பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். மற்றவர்களிடம் உதவி கேட்க தயக்கம் வரும்.ஆன்மீக பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, சவாலான காரியங்களை கையில் எடுக்க வேண்டாம். புது நட்பு வட்டாரம் உருவாகும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் கவனம் தேவை.யாரையும் அதிகமாக நம்பாதீர்கள்.தொழில் வியாபாரங்கள் மிதமாக இருக்கும்.
Image credits: Freepik