
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். இன்று முதல் தினசரி இராசி பலன்களை துல்லியமாக அறியலாம். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
இன்று எந்த ராசிக்காரர்கள் கோபத்தை குறைத்து கொள்வது நல்லது?
சோபகிருது வருடம் மார்கழி மாதம் 5ம் தேதி
21-12-2023 வியாழக்கிழமை.
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே,புதிய நபர்களை சந்திப்பீர்கள். எதிர்பார்ப்புகள் நாளடைவில் நிறைவேறும். குடியிருக்கும் வீட்டை சீரமைக்க வேண்டிவரும். கோபத்தை குறைப்பது நல்லது. உத்தியோகத்தில் அமைதி நிலவும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். ஆன்மீக நாட்டம் கூடும். பெற்றோர்கள் பக்கபலமாக இருப்பர். உத்யோகத்தில் வேலை பளு குறையும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, மற்றவர்களை நம்பி எந்த முடிவும் எடுக்க வேண்டாம். பிரபலங்களின் தொடர்பு ஆதாயத்தை தரும். உடல் நலம் சீராகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்பத்தில் நல்லது நடக்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, மனதில் மாறுபட்ட யோசனைகள் பிறக்கும். எதிரிகளின் பலம் குறையும். உறவினர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவர். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்ப வருமானம் படிப்படியாக உயரும். பிடிக்காத விஷயங்களை செய்ய வேண்டாம். பிரபலங்களின் அறிமுகம் உற்சாகம் தரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
துலாம்
துலாம் ராசி நண்பபர்களே, குடும்பத்தில் குதூகலம் பூத்துக் குலுங்கும். சின்ன சின்ன விஷயங்கள் கூட பல படங்கு .நன்மை தரும். வாகனம் வாங்கும் எண்ணம் வரும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, பாதியில் நின்ற வேலைகள் சீக்கிரத்தில் முடிவடையும். பொருள் வரவுக்கு வாய்ப்புண்டு. நெருக்கமானவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். தொழில், வியாபாரம் விரிவடையும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். உடல் சோர்வு நீங்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக மாறும். அடுத்தவர்களை குறை சொல்வதை தவிர்க்கவும். பால்ய நண்பர்கள் ஆதரவாக இருப்பர். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, கணவன் மனைவி உறவு பலப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி சம்பவம் ஒன்று நடக்கும். குலதெய்வ வழிபாடு சிறக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மீனம்
மீனம் ராசி நண்பர்களே, அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். மனக்குழப்பம் நீங்கும்.பயணங்கள் அனுகூலமான திருப்பங்களை தரும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அவசர முடிவுகள் தவிற்க்கவும்.
image credits: freepik