இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
இன்று பயணங்களால் பலன் பெறக்கூடிய ராசிகள் எது?
சோபகிருது வருடம், மாசி மாதம் 10 தேதி
22-02-2024 வியாழக் கிழமை.
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வரும். உடல் நல குறைபாடுகள் தோன்றி மறையும். அடுத்தவருக்கு உதவி செய்யும் மனோபாவம் இருக்கும். கணவன் மனைவிடையே பனி போர் ஏற்படும். உத்யோகத்தில் கவனம் தேவை.தொழில் வியாபாரங்கள் மிதமான லாபத்தை தரும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.ஆன்மீக பயணங்கள் மேற்கொள்ள முடியும். அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு பெருகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். முன் கோபத்தை தவிற்க்கவும்.உத்யோக மாற்றம் ஏற்படும்.தொழில் வியாபாரங்கள் லாபத்தை தரும்
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். பழைய பகைகள் மறையும் சொந்த பந்தங்கள் உங்களை நாடி வருவர். புதிய முயற்சிகள் சாதகமான பலனை கொடுக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.தொழில் வியாபாரத்தில் வியாபார யுக்திகளால் லாபம் பன்மடங்கு பெருகும் .
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்ப பெரியோர்களின் ஆசி கிட்டும். நண்பர்கள் ஆதரவாக செயல்பட தொடங்குவர். பழமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். தொழில், வியாபாரம் செழிப்படையும். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும் யாருக்கும் வாக்குறுதிகளை வழங்காதீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி நிரம்பும். நல்ல செய்தி ஒன்று காதில் விழும். இழுபறியாக இருந்த வேலைகள் சீக்கிரத்தில் முடியும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும் புதிய முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, உற்றார், உறவினர்களிடம் ஏற்பட்ட விரிசல்கள் மறையும். மனம் தெளிவு பெறும். புது நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பர்.புதிய வாகன யோகமும் உண்டு வெளியூர் பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.உத்யோகத்தில் பாராட்டுகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டு
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்ப அந்தஸ்தை உயர்த்த முடியும்.கேட்ட கடன் தொகை இன்று கிடைக்கும் விருப்பங்களை நிறைவேற்றலாம். வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம். வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.தொழில் வியாபாரங்கள் மந்தநிலை காணப்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். கணவன் மனைவிக்குள் தேவையற்ற வாக்கு வாதங்கள் உருவாகும். சுற்றி இருபவர்களின் ஆதரவு பெருகும். திட்டமிடாத மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.மாலை 6:26 வரை சந்திராஷ்டமம் நீடிக்கிறது கவனம்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்ய முடியும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.மாலை 06:26 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் தொடங்குகிறது அடுத்த இரண்டு தினங்களுக்கு கவனத்துடன் செயல்படுங்கள்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்ப பிரச்சனைகள் குறையும். மனதில் தெம்பும், தைரியமும் அதிகரிக்கும்.கடன் பிரச்சனைகள் சிறுக சிறுக குறையும். ஆன்மீக நாட்டம் கூடும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். தொழில் வியாபாரங்கள் மிதமாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தில் நல்ல ஒரு ஒற்றுமை இருக்கும். தந்தையின் ஆதரவும் உதவிகளும் கிடைக்கும் . முன் கோபத்தை தவிற்க்கவும்.யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். முக்கிய காரியங்கள் நிறைவேறும். செய்தொழிலில் மேன்மை நிலை உண்டாகும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, மனதில் பட்டதை தைரியமாக செய்ய முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிக்கான பேச்சுக்கள் நடைபெறும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். பிரியமானவர்களின் வருகை இருக்கும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் சீராக இருக்கும்.
Imagecredit – Freepik