
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
இன்று இந்த ராசிக்காரர்கள் முன்கோபத்தை குறைப்பது நல்லது
சோபகிருது வருடம் தை மாதம் 8ம் தேதி 22-01-2024 திங்கட்கிழமை
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, முன் கோபத்தை குறைக்கவும். கணவன் மனைவிக்குள் தேவையற்ற வாக்கு வாதங்கள் தவிற்பது நல்லது. அனுபவ அறிவை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் வரும். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.உறவினர்கள் உதவி செய்வார்கள். குடும்ப சுமை அதிகரிக்கும். அண்டை அயலாரிடம் கவனமுடன் செயல்படல் நன்று. கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே,உற்சாகமாக காணப்டுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பண வரவு இருக்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் சிறப்படையும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்ப ரகசியங்களை கவனமாக கையாளவும். கணவன் மனைவிக்குள் ஈகோ தலைதூக்கும். வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். வம்பு, வழக்குகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. உத்யோக மாற்றம் ஏற்படும்.தொழில் வியாபாரத்தில் மந்தநிலை காணப்படும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.காரிய தடை விலகும். தொழில்,முக்கியஸ்தர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, மனதில் இனந்தெரியாத கவலைகள் வந்து நீங்கும். வீண் பேச்சுக்களை தவிர்க்கவும். நெருக்கமானவர்களின் சந்திப்பு நிகழும். மன ஆறுதல் கிடைக்கும் உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.தொழில் வியாபாரங்கள் சீராக இருக்கும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்ப பிரச்சனைகளை சமாளிக்க முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பர். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்.அவசர முடிவுகள் தவிற்க்கவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்ப அடிப்படை வசதிகள் உயரும். கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும்.விலகி சென்றவர்கள் விரும்பி வந்து இணைவர். நிலுவை பணிகளை நிறைவு செய்வீர்கள். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் தேவை.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது ஒன்றாகவும் இருக்கும். மனக்குழப்பம் நீங்கும்.பயணங்களால் மன நிறைவு ஏற்டும். நண்பர்களால் சில நேரங்களில் மனசங்கடம் ஏற்படும். பண விவகாரங்களில் கவனம் தேவை . தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மகரம்
மகர ராசி நண்ர்களே, பிரபலங்களின் தொடர்பு கிடைக்கும். நெருங்கிய உறவினர்களின் அன்பும், ஆதரவும் கிட்டும். முன் கோபங்களை தவிற்க்கவும்.யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள் வேகமான வாகன பயணங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, வீட்டிற்கு தேவையானது வாங்க முடியும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். பெற்றோர்களின் அன்பு கிட்டும். கணவன் மனைவிக்குள் இருந்துவந்த மன ஸ்தாபங்கள் மறையும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, எதிர்காலம் பற்றி பெரிய திட்டம் இருக்கும். திட்டமிட்ட வேலைகள் தடையின்றி முடியும். நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில்,பால்ய நண்பர்களின் சந்திப்பு நிகழும்.உத்யோகத்தில் நற் பெயர் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
Image credits: Freepik