
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
சோபகிருது வருடம் தைமாதம் 9ம் தேதி 23-01-2024 செவ்வாய்க்கிழமை
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே,கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கு திரும்ப கிடைக்கும். தேவையான பணம் கைக்கு வரும். விஐபிகளின் தொடர்பு கிட்டும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
தொழில் வியாபாரங்கள் சிறப்படையும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்ப விஷயங்களில் கவனம் செலுத்தவும். கணவன் மனைவிக்குள் விட்டு கொடுத்து செல்வது நல்லது வெளியிடங்களில் உஷாராக இருக்கவும். பழைய இனிய நினைவுகள் மகிழ்ச்சியை தரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, அலைச்சல் அதிகமாக காணப்படும் உழைப்பிற்கேற்ப வரும் வரும். கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். அடுத்தவர் பிரச்சனையில் தலையிட வேண்டாம். புது நண்பர்கள் அறிமுகமாவர். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்ப விவகாரத்தில் அவசரம் காட்ட வேண்டாம். கணவன் மனைவி்குள் தேவையற்ற வாக்குவாதங்கள் உருவாகும்.பொருளாதார நிலை உயரும். சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.தொழில்.வியாபாரங்கள் சீராக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்பத்தில் ஆதரவு பெருகும். ஒவ்வாத உணவை உண்ண வேண்டாம். பிரியமானவர்கள் வழியில் சில மனக்கஷ்டம் வரலாம். நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும் பணவிவகாரங்களில் கவனம் தேவை.தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே,விருப்பமான காரியம் ஒன்று நடந்தேறும் தடைபட்டு வந்த காரியம் சீக்கிரத்தில் முடியும்.கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பெற்றோர்களிடம் விட்டு கொடுத்து போகவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
துலாம்
துலாம் ராசி அன்பர்களே, குடும்பத்தில் உங்கள் ஆலோசனை ஏற்கப்படும். பண நெருக்கடி ஏற்படும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும். சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமும் நிதானமும் அவசியம். தேவையில்லாத சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்ப அந்தஸ்த்து உயரும்.சகோதரர்களின் உதவிகள் கிடைக்கும் காரிய தடைகள் அகலும். மனதில் உற்சாகமும் சந்தோஷமும் அதிகரிக்கும். சொத்து வழக்கில் இழுபறி நிலை நீடிக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்பத்தில் மங்கள நிகழ்வுகளுக்கான பேச்சுக்கள் நடக்கும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும் சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. வாகன பராமரிப்பு செலவு கூடும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் குறையும். முக்கிய பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை நீங்கும் புதிய முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, புதிய விஷயங்களை அறிந்துகொள்ள ஆர்வம் ஏற்படும். உறவினர்களால் சில மனக்கசப்புகள் வரும்.பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை. திருமணம் சுபகாரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, தடைபட்ட வேலைகள் நிறைவு செய்வீர்கள் குடும்பத்தில் செலவுகள் கூடும். பயணங்களை தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மன கசப்பு மாறும்.உத்யோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தொழில், வியாபாரம் விரிவடையும்.
Image credits: Freepik