
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
இந்த ராசிக்காரர்களுக்கு பெரியோர்களின் ஆசியும் அன்பும் கிட்டும்.
சோபகிருது வருடம் தைமாதம் 10ம் தேதி 24-01-2024 புதன்கிழமை
மேஷம்
மேஷ ராசி நணாபர்களே, குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் வரும். கணவன் மனைவிக்குள் புரிதல் அவசியம். உறவினர்களின் வழியில் மனக்கசப்பு வரலாம். தள்ளிப் போன காரியங்கள் எளிதாக முடியும். உத்யோக மாற்றம் ஏற்படும்.தொழில் வியாபாரங்கள் செழிப்படையும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் இருக்கும். மனதிற்கு இதமான செய்தி வரும். யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, முக்கிய காரியங்களை போராடி முடிக்க வேண்டிவரும். பண விஷயத்தில் கவனமாக இருங்கள் .பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. அடமான நகை மீட்ட முடியும்.கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். பண உதவிகள் கிடைக்கும்.தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, பிரபலங்களின் தொடர்பு மிகுந்த உற்சாகம் தரும். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடை பெறும்.கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். எதிர்பார்த்த விஷயங்கள் தாமதமாக முடியும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.தொழில் வியாபாரங்கள் சிறப்படையும்.புதிய முதலீடுகள் லாபத்தை தரும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, புதிய முயற்சிகளை தாராளமாக தொடங்கலாம். பயணங்கள் தாமதமாகும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். எதிர்ப்புகளை சமாளிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். பெற்றோர்கள் உறுதுணையாகவே இருப்பர். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும்.நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு செய்வர்.பண விஷயத்தில் கவனமாக செயல்படுங்கள்.
புது தொழில் யோகம் அமையும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, விலகிய சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். தேக ஆரோக்கியம் பலம் பெறும். நிலுவை பணிகளை நிறைவு செய்வீர்கள் புது உற்சாகம் பிறக்கும் .வெளிவட்டாரத்தில் நிறைய தொடர்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, மற்றவர்களை நம்பி எந்த காரியத்தையும் செய்ய வேண்டாம்.கணவன் மனைவிக்குள் வீண் விவாதங்கள் உண்டாகும். மனதில் ஏற்பட்ட குழப்பம் படிப்படியாக நீங்கும். பழைய வீட்டை சீரமைக்க வேண்டிவரும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, குடும்பத்தில் சிறு சிறு சண்டை சச்சரவுகள் வந்து போகும். மறைமுக எதிரிகள் தொல்லை இருக்கும். நண்பர்களிடம் அனுசரித்து போகவும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.தொழில் வியாபாரம் சிறப்படையும்.
Image credits: Freepik