
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். இன்று முதல் தினசரி இராசி பலன்களை துல்லியமாக அறியலாம். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
இன்று விலை உயர்ந்த பொருட்களை மிகவும் கவனமாக எந்த ராசிக்காரர்கள் கையாள வேண்டும்?
சோபகிருது வருடம் மார்கழி மாதம் 9’ம் தேதி 25-12-2023 திங்கட்கிழமை.
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே,கணவன் மனைவிக்குள் விவாதங்கள் வேண்டாம்.உறவினர்களிடம் உஷாராக இருங்கள். அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, பொருளாதார நிலை சீரடையும். மனதில் இனந்தெரியாத கவலைகள் வந்து நீங்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போகவும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளவும். பிரியமானவர்கள் வழியில் மனவருத்தம் வரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, தள்ளி போன வேலைகள் கூட சீக்கிரத்தில் முடியும். வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம். உறவினர்களுடன் சின்ன மனஸ்தாபம் வரும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும். பழைய நண்பர்களின் சந்திப்பு நிகழும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, மனதில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலவும். புதிய முயற்சிகள் கைகூடும். அடுத்தவர்களின் நலனுக்காக உழைக்க வேண்டிவரும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தின் மீது பாசம் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. தூரத்து பயணங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.காலை 10:22 மணிக்கு சந்திராஷ்டமம் தொடங்க இருப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, உங்கள் செயலில் வேகமும், விவேகமும் இருக்கும். ரகசியங்களை வெளியில் பகிர வேண்டாம். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்பத்தில் நிலையான ஒரு சந்தோஷம் இருக்கும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, நிதி நிலைமை சீர்படும். வெளிப்படையாக பேசுவதால் பிரச்சனைகள் அதிகம் வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, எதையும் ஒரு முறைக்கு பல தடவை யோசித்து செய்யவும். தெய்வ பிராத்தனைகள் நிறைவேறும். உறவினர்களின் அன்பு தொல்லை இருக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
மீனம்
மீன ராசி நண்ர்களே, குடும்ப சுமை அதிகரிக்கும். நினைத்த வேகத்தில் வேலைகளை செய்ய முடியும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
Image credits: freepik