
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
சோபகிருது வருடம்தைமாதம் 11ம் தேதி 25-01-2024 வியாழக்கிழமை.
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும்.குல தெய்வ வழிபாடு சிறக்கும். யாரிடத்திலும் அதிகம் உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் லாபத்தை தரும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, உறவினர்களின் உதவிகள் கிடைக்கும்.
குடும்ப வருமான உயரும். தொடர் வேலைகளால் அலைச்சல் அதிகரிக்கும். வெளி உணவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். நட்பால் நன்மை உண்டு. கடன் தொல்லை ஓரளவு குறையும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியரும்.வியாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும்.
புதிய முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும். அவசர முடிவுகள் தவிற்க்கவும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்ப ரகசியங்களை பாதுகாக்கவும். துணிச்சல், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே,கணவன் மனைவிக்குள் விட்டு கொடுத்து போகவும். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். சிக்கனமாக இருந்து சேமிக்க பழகவும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, எதிர்ப்புகளை தகர்த்தெறிய முடியும். நெருக்கமானவர்கள் உதவிக் கேட்டு வருவர். கணவன் மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். உத்யோகத்தில் கவனம் தேவை தொழில் வியாபாரத்தில் மந்தநிலை காணப்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தில் நிதானத்தை கடைப்பிடிக்கவும். எதிரிகள் விலகுவர். திருமண பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, நீண்ட நாள் வேண்டுதல்கள் நிறைவேறும். உறவினர்கள் சிலர் உதவி கரம் நீட்டுவர். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்..
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்ப பாரம் கூடும். சவால்கள், விவாதங்களில் வெற்றி கிடைக்கும். சொந்த, பந்தங்கள் உங்களை நாடி வருவர். உத்யோகத்தில் அமைதி நிலவும்
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, தனித்திறமைகள் பளிச்சென்று வெளிப்படும். மறைமுக எதிர்ப்புகள் தானாக விலகும். பிடிவாதப்போக்கை மாற்றிக்கொள்ளவும். உத்யோகத்தில் பணிச்சுமை குறையும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, குடும்பத்தில் நல்ல ஒத்துழைப்பு கிடைக்கும். திட்டமிட்ட காரியத்தை சிறப்பாக முடிக்க முடியும். ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.
image credits: Freepik