
இன்று இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும்.
சோபகிருது வருடம் மார்கழி மாதம் 10 தேதி 26-12-2023 செவ்வாய்க்கிழமை.
மேஷம்
மேஷ ராசி நேயர்களே,உவினர்களிடமிருந்து நல்ல செய்தி கிடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும். புதியவர்கள் நட்பால் நன்மை உண்டு. முக்கிய பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே, கணவன் மனைவிக்குள் இருந்துவந்த பனிப்போர் மறையும்.மனதிற்கு இதமான செய்தி வரும். சொந்த பந்தங்கள் உதவியை நாடி வருவர். எதிர்பாராத செலவுகள் வரும். உத்யோகத்தில் பொறுமை அவசியம்
மிதுனம்
மிதுன மேஷ ராசி நண்பர்களே,மூன்றாம் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். இஷ்ட தெய்வ வழிபாடு நன்மை தரும். பெற்றோர்கள் வழியில் நல்லது நடக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் மனக்குழப்பம் காணப்படும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.ஜாமீன் கையெழுத்துக்ள் தவிருங்கள். குடும்ப பாரம் அதிகரிக்கும். நினைத்த வேகத்தில் வேலைகளை செய்ய முடியும். சொந்த விஷயங்களை வெளியில் பகிர வேண்டாம். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, பழைய நிலுவை பணி முடிப்பீர்கள்.உற்றார், உறவினர்களால் அனுகூல பலன் கிட்டும். வெளிநாட்டு யோகம் உண்டு. கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, புதிய முயற்சிகள் சில நாள் தள்ளிப் முடியும். வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, ஆன்மீக ஈடுபாடு உண்டாகும். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் இருக்கும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.சந்திராஷடமம் நீடிப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். யாரையும் எளிதில் நம்ப வேண்டாம். எதிர்பார்ப்புகள் நாளடைவில் நிறைவேறும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்ப பிரச்சினைகள் அகலும். சொன்ன சொல்லை காப்பாற்ற முடியும். பிறரை விமர்சித்து சிக்கலில் மாட்ட வேண்டாம். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
மகரம்
மகர ராசி நண்பர்களே, சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தினர் ஒத்துழைப்பு கிடைக்கும். எதையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, எதிர்பார்த்த வேலைகள் தாமதமாகும். உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். பெரியோர்கள் ஆலோசனை கைகொடுக்கும். புது தொழில் யோகம் அமையும்.
Image credits: Freepik