
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
இந்த ராசிக்குள் சந்திரன் இருப்பதால் யாருக்கும் வாக்குறுதிகளை வழங்காதீர்கள்
சோபகிருது வருடம் மாசி மாதம் 14ம் தேதி 26-02-2024 திங்கட்க்கிழமை.
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, சொந்த வேலைகளை முடிப்பதில் வேகம் கூடும். பெற்றோரின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும்.வருங்கால திட்டங்களை வகுப்பீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உத்யோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.தொழில் வியாபாரங்கள் லாபத்தை தரும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்பத்தில் புது திட்டம் நிறைவேறும். உறவினர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.யாருக்கும் ஜாமீன் கையெழுத்துக்கள் போடாதீர்கள் உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் மிதமாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, முக்கிய காரியங்கள் திட்டமிட்டபடியே நடக்கும். விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லது. முன் கோபம் தவிர்க்கவும்.யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள்.எதிர்பார்த்த பணம் கைக்கு வரும் பண தேவைகள் குறையும். தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்ப சலசலப்புகள் மறையும்.மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவதால் சில பிரச்சனைகள் வரக்கூடும். பொருளாதார வளர்ச்சி ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்கவும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, முக்கிய காரியங்கள் இனிதே நடைபெறும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். ஆசைபட்டதை வாங்க முடியும் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தில் மனம் மகிழும் சம்பவம் ஒன்று நடக்கும்.மனம் தெளிவின்றி தவிக்கும் ஏற்கனவே பட்ட நம்பிக்கை துரோகம் வலிகள் மனதில் வந்து போகும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் உயந்த நிலை உண்டு. ராசிக்குள் சந்திரன் இருப்பதால் யாருக்கும் வாக்குறுதிகளை வழங்காதீர்கள்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். புது நண்பர்களின் அறிமுகம் உற்சாகம் தரும். தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். ஆன்மீக பயணம் மேற்கொள்ள முடியும்.வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.உத்யோக மாற்றம் ஏற்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பத்தினர் பக்கபலமாக இருப்பர். மனைவி மூலமாக நன்மைகள் கிடைக்கும். மனதில் ஏற்பட்ட குழப்ப நிலை நீங்கும்.கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் சிறப்படையும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்பத்தில் அமைதி நிலவும்.பண பிரச்சனைகள் படிப்படியாக குறையும். பல நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும்.நிலுவை பணிகளை நிறைவு செய்வீர்கள். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்ப முன்னேற்றத்தில் கவனம் தேவை. விட்டு கொடுத்து போகும் மனப்பான்மை இருக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.மதியம் 01:40 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை. அவசர முடிவுகள் தவிர்ப்பது நல்லது.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தில் இருந்த குழப்ப நிலை நீங்கும். விலை மதிப்புள்ள பொருட்களை வாங்க முடியும். உறவினர்களால் அலைச்சல் வரும். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள் தேவையின்றி கடன்கள் வாங்காதீர்கள். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும். மதியம் 01:40 மணிக்குமேல் சந்திராஷ்டமம் தொடங்குகிறது.
மீனம்
மீன ராசி நண்பர்களே, கையில் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். புதிய யோசனைகள் உதயமாகும். அதற்கு செயல் வடிவம் கொடுப்பீர்கள் .ஆசைபட்ட புது வாகனம் ஒன்றை வாங்க முடியும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். உத்யோகத்தில் பணிச்சுமை குறையும்.
Image credits: Freepik