
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
சோபகிருது வருடம் தை மாதம் 12ம் தேதி 26-01-2024 வெள்ளிக்கிழமை.
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே,புதிய யோசனை தோன்றும். எதிர்பார்ப்புகள் எதுவாகினும் அது நிறைவேறும். கணவன் மனைவி உறவு பலப்படும்.பெரியோர்களின் ஆசி கிட்டும். எதிரிகள் தொல்லை சுவடு தெரியாமல் மறையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்ப சூழ்நிலைகளால் சில மனக்குழப்பங்கள் வந்து நீங்கும்.கணவன் மனைவிக்குள் வீண் விவாதங்கள் வரக்கூடும். புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள முடியும். பண வரவு தாமதமாகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, நற்செய்தி ஒன்று கிடைக்கும். குடும்பத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கும். கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும்.ஆன்மீக எண்ணம் மேலோங்கும். காரிய தடை விலகும். உத்யோகத்தில் நற் பெயர் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்ப முன்னேற்றத்தில் அக்கறை கொள்ளவும். வாக்கு சாதுர்யம் ஏற்படும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்ப அந்தஸ்து உயரும். உங்களால் சுற்றி இருப்பவர்கள் பயனடைவர். உறவினர்களுடன் சில விரிசல்கள் வரக்கூடும். உத்யோகத்தில் சம்பள உயர்வு உண்டு. தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தில் செலவுகள் குறைந்து சேமிப்புகள் அதிகமாகும். மன சஞ்சலம் நீங்கும். பண வரவில் சிறிய சிக்கல் இருக்கும். உத்யோகத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் மந்தநிலை காணப்படும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் அகலும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. உடல் ஆரோக்யம் சிறப்படையும். அலைச்சல் அதிகமாகும் தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம். ஏற்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, கொடுத்த வாக்கை காப்பாற்ற இயலும். பெற்றோர்கள் ஆதரவு பெருகும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, உறவினர்களால் சில மனக்கசப்புகள் உண்டாகும். அடிப்படை தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும். சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமும் நிதானமூம் அவசியம்
மகரம்
மகர ராசி நண்பர்களே, கணவன் மனைவி உறவு பலப்படும்.நல்ல மனிதர்களின் தொடர்பு கிட்டும். தேவையான பொருட்களை வாங்க முடியும். சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. புது தொழில் யோகம் அமையும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, பொது நலக் காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். அடுத்தவர்களை குறை சொல்ல வேண்டாம். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை கூடும். எதிலும் அவசரமில்லாமல் நிதானமாக செயல்படவும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் பணிசுமை கூடும். தொழில் வியாபாரங்கள் சுமாராக இருக்கும்.
Image credits: Freepik