
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். . உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
இன்று எந்த ராசிக்காரர்கள் வாகனத்தில் மெதுவாக செல்ல வேண்டும்?
சோபகிருது வருடம் மார்கழி மாதம் 11ம் தேதி 27-12-2023 புதன்கிழமை
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, தொடர் வேலைகளால் சோர்வு ஏற்படும். பெற்றோர்கள் வழியில் நல்லது நடக்கும். கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்ப விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். கடினமாக காரியங்களையும் எளிதில் முடிக்க முடியும். வெளியாட்களின் தொடர்பு கிட்டும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, பிறரிடம் உதவி கேட்க தயக்கம் ஏற்படும். தெய்வ வழிபாடு சிறக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, திட்டமிட்ட காரியமொன்றில் திடீர் மாற்றம் ஏற்படும். வாக்கு சாதுரியம் ஏற்படும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். தொழில், வியாபாரம் சிறக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். பக்தி எண்ணம் மேலோங்கும். அடுத்தவர்களை பற்றிய தவறான சிந்தனையை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் இருக்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக அமையும். சுய கௌரவத்தை விட்டு தர வேண்டாம். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பத்தில் சுபிட்சம் நிலவும். பொருளாதார நிலையில் ஏற்றம் உண்டு. தான தர்மங்களில் மனம் செல்லும். உத்யோகத்தில் இருந்த தடை நீங்கும்.சந்திராஷடமம் நீடிப்பதால் கவனம் தேவை.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, வெளிவட்டார பழக்கம் விரிவடையும். கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்பத்தில் எதிர்பார்க்காத விஷயங்கள் நடக்கும். பெற்றோர்கள் பக்கபலமாக இருப்பர். வாகனங்களில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்ப தேவைகள் அதிகரிக்கும். எடுத்த காரியம் கச்சிதமாக முடியும். யாரை நம்புவது என்ற குழப்பம் வரும். தொழில், வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, உறவினர்களின் அன்பு மனமகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியம் பலம் பெரும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
Image credits: Freepik