இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
இன்று இந்த ராசிக்காரர்கள் புதிய முயற்சிகளை சற்று தள்ளி வைக்கவும்.
சோபகிருது வருடம் தைமாதம் 13ம் தேதி 27-01-2024 சனிக்கிழமை.
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, குடும்ப வாழ்வில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும் எதிர்பாராத விஷயங்கள் நடக்கும். புதிய முயற்சிகளை சற்று தள்ளி வைக்கவும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே, தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி உறவு பலப்படும்.மனதில் இரு வித அச்சம் இருக்கும். வேகமான வாகன பயணங்களை தவிர்க்கவும். அலைச்சல் அதிகமாக காணப்படும்.
தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, நற் செய்தி ஒன்று கிடைக்கும். அடுத்தவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். கூடா நட்பு கேடாய் விளையும்.தள்ளிப் போன காரியங்கள் விரைவில் முடியும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, புதிய வாகன யாேகம் உண்டு . குடும்பத்தின் நன்மதிப்பை பெற முடியும்.கணவன் மனைவிக்குள் விவாதங்கள் வந்து போகும். எதிர்ப்புகளை சமாளிக்க முடியும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்ர்களே, குடும்பத்தில் சில சலசலப்புகள் தோன்றி மறையும். உறவினர்களால் சில நெருடல்கள் வரும். நண்பர்களுக்கு பண உதவி செய்ய நேரிடும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும். மதியம் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அடுத்த இரண்டு தினங்களுக்கு மனக்குழப்பம் காணப்படும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. பயணங்களால் களைப்பு உண்டாகும். நெருக்கமானவர்களின் பிரச்னையை தீர்க்க முடியும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் சாதிப்பீர்கள்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே,வண்டி வாகனங்கள் திடீர் சிலவு வைக்கும். குடும்பத்தில் நெருக்கடி நிலை உண்டாகும். பெண்கள் வழியில் ஆதாயம் உண்டு. விஐபிகளின் அறிமுகம் உற்சாகம் தரும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, பெரியோர்களின் ஆலோசனை கைகொடுக்கும்..கணவன் மனைவிக்குள் கலந்தாலோசித்து எந்த முடிவுகளும் எடுக்கவும். மனதில் புத்துணர்வு பொங்கும். எதிலும் முன்யோசனையுடன் செயல்படவும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்பத்தில் சகஜ நிலை இருக்கும். மற்றவர்களை முழுமையாக நம்பி ஏமாற வேண்டாம். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். உத்யோகத்தில் பணி சுமை கூடும். சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, புது நபர்களை அதிகம் நம்பி ஏமாற வேண்டாம். நண்பர்கள் எதிராக செயல்படுவர். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனக்கசப்பு மாறும். அலைச்சல் அதிகமாக இருந்தாலும் வருமானம் நன்றாக இருக்கும்.புதிய முதலீடுகளால் தொழில், வியாபாரங்கள் செழிப்படையும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, சம்மதமில்லாத விஷயங்களில் ஈடுபட வேண்டாம்.பிடிவாத குணத்தை தளர்க்கவும்.யாரிடமும் கோபத்தை காட்டாதீர்கள். திருமண சுபகாரியம் விரைவில் கைகூடும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
மீனம்
மீன ராசி நண்பர்களே, குடும்ப பிரச்சனைகள் குறையும்.வீண் பேச்சுக்களால் சங்கடங்கள் வரும். யாரிடத்திலும் அதிகம் பேச வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை. சொந்த பந்தங்களால் நல்லது நடக்கும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
Image credits: Freepik






