
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். . உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
இன்று இந்த ராசிக்காரர்கள் எதிர்மறை எண்ணங்களை மனதில் அனுமதிக்க வேண்டாம்.
சோபகிருது வருடம் மார்கழி மாதம் 12ம் தேதி 28-12-2023 வியாழக்கிழமை.
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, கணவன் மனைவிக்குள் வாக்குவாதங்கள் தவிற்க்கவும்.எதிலும் தீர யோசித்து முடிவு எடுக்கவும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்கும். கடன் பிரச்சனை தீர வழி கிடைக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்பத்தை பற்றிய உயர்வான எண்ணம் இருக்கும். உற்றார், உறவினர்கள் உதவி கேட்டு வருவர். வாகனங்களில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். செலவுகளை கட்டுப்படுத்த முயற்சிக்கவும். திருமண பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்பத்தில் அனுசரித்துச் போகவும். தெய்வ வழிபாடு மூலம் மனகுறைகள் நீங்கும். மறைமுகப் எதிர்ப்புகள் வரும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்ப பிரச்சனைகள் வெகுவாக குறையும். முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நிகழும். பெற்றோர்கள் வழியில் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, எதிரிகளின் பலம், பலவீனம் அறிந்து செயல்படவும். நண்பர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவர். கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். கணவன், மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, உங்களால் மற்றவர்கள் நன்மையடைவர். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் இருக்கும். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்ப பொருளாதாரத்தில் கவனம் தேவை. எதிர்மறை எண்ணங்களை மனதில் அனுமதிக்க வேண்டாம். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, தள்ளிப் போன விஷயங்கள் விரைவில் முடியும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தில் சந்தோஷமான சூழல் இருக்கும். மன பயத்தை நீக்கவும். எதிர்பார்த்த நல்ல தகவல் வரும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனமாக இருக்கவும். விலகி நின்றவர்கள் மீண்டும் வருவர். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
Image cedtis: Freepik