
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
இன்று திடீர் குழப்பத்தை சந்திக்க கூடிய ராசியினர் யார்?
சோபகிருது வருடம் மாசி மாதம் 16ம் தேதி
28-02-2024 புதன்கிழமை
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, குடும்பத்திற்கு பெரியளவில் நன்மை கிடைக்கும். வேண்டியவர்கள் சிலர் உதவி கேட்டு தொந்தரவு செய்வர். கணவன் மனைவிடையே விட்டுக்கொடுத்தல் அவசியம். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்பத்தில் இருந்த எதிர்ப்புகள் நீங்கும். விரைவில் புது வீடு மாற்றம் ஏற்படும். கோபத்தை குறைப்பது நல்லது. உத்யோகத்தில் செயல்திறன் அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் ஆனந்தம் பொங்கும். சொந்த – பந்தங்கள் உங்களை உயர்வாக பேசுவர். மனம் தெளிவு பெரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, ஒதுங்கி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். உடல் நலம் சீராகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்பத்துடன் பயணம் மேற்கொள்ள விருப்பம் ஏற்படும். பழைய வீட்டை சீரமைக்க வேண்டிவரும். நண்பர்களிடம் விரோதம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க ,முடியும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உறவினர்கள் வகையில் நல்லது நடக்கும். திருமண காரியம் விரைவில் கைகூடும். தொழில், வியபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் கவனம் தேவை.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, நெடுநாட்களாக இருந்த சங்கடம் தீரும். பொருளாதார நிலை சீரான வளர்ச்சி காணும். மனம் தளராமல் தைரியத்துடன் செயல்படவும். உத்யோகத்தில் பணிசுமை கூடும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, பெற்றோர்களின் அறிவுரை கிடைக்கும். நண்பர்களிடத்தில் இருந்த பகைமை மாறும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் உண்டாகும். முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எதிரி தொல்லை சுவடு தெரியாமல் மறையும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, விருப்பப்படியே எல்லாம் நடக்க ஆரம்பிக்கும். உறவினர்களின் அன்பும், ஆதரவும் கிட்டும். வேகமான வாகன பயணங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.சந்திராஷ்டமம் இரவு வரை நீடிப்பதால் கவனம் தேவை.
மீனம்
மீன ராசி நண்பர்களே, குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். பல வகையிலும் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பார்ப்புக்கு தகுந்தாற்போல ஒருவர் அறிமுகமாவர். உத்யோகத்தில் சில அலைச்சல் ஏற்படும்.
Image credit – Freepik