
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். . உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
இன்று இந்த ராசிக்காரர்களுக்கு கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.
சோபகிருது வருடம் மார்கழி மாதம் 13ம் தேதி 29-12-2023 வெள்ளிக்கிழமை
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, கணவன் மனைவி உறவு பலப்படும்.பொது வாழ்வில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். சொந்த பந்தங்களால் நன்மை உண்டு. யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, ஞாபகமறதி காணப்படும் .குடும்ப சவால்களை எதிர்கொள்ள வேண்டிவரும். திட்டமிட்ட காரியம் வெற்றி பெரும். வீடு மாற்றலாகி செல்லக்கூடும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் புது திட்டங்கள் நிறைவேறும். வாக்கு சாதுரியம் ஏற்படும். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யவும். தொழில், வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்பத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பிரபலங்களின் அறிமுகம் கிட்டும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். எதிர்பார்த்த காரியங்கள் தாமதமின்றி முடியும். வாகன பராமரிப்பு செலவு இருக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தில் ஒற்றுமை நிலைத்திருக்கும். அடிக்கடி டென்ஷன் ஆகாமல் பார்த்துக்கொள்ளவும். வெளிவட்டார பழக்கங்கள் அதிகரிக்கும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தில் அடிக்கடி சலசலப்புகள் வந்து போகும். பண வரவு தாமதாகும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். புது நண்பர்கள் அறிமுகமாவர். எதிர்பாராத செலவுகள் வந்து போகும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்ப தேவைகள் அதிகமாகவே இருக்கும். தெய்வ வழிபாடு மன அமைதியை தரும். உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, பிடிவாதப் போக்கை கைவிடவும். யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். கடன் தொல்லை ஓரளவு குறையும். உத்யோகத்தில் திருப்தியான நிலை உண்டாகும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, யாரிடமும் விவாதம் பேச வேண்டாம். நிதானமான செயல்களால் நன்மை உண்டு. கணவன் மனைவிக்குள் இருந்த பனிப்போர் நீங்கும். புது தொழில் யோகம் அமையும்
மீனம்
மீன ராசி நண்பர்களே, குடும்பத்தில் பொறுப்புகள் அதிகமாகும். எதையும் ஒளிவு மறைவின்றி பேசுவது நல்லது. அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
Image credits: freepik