
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
இன்று பெரிய மனிதர்களின் ஆதரவு பெறும் ராசி யார்?
சோபகிருது வருடம் மாசிமாதம் 17 ஆம் தேதி
29-02-2024 வியாழக்கிழமை.
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.கோயில் தலங்களுக்கு செல்ல யோசனை தோன்றும்.குடும்ப நலம் மேலோங்கும். நன்மை கிடைக்கக்கூடிய காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.பண விவகாரங்களில் கவனம் தேவை. புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள்.குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். பிரியமானவர்கள் நேச கரம் நீட்டுவர். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில் வியாபாரங்கள் செழிப்படையும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். தள்ளிப் போன காரியங்கள் விரைவில் முடியும். புது வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் அமைதி நிலவும். தொழில் வியாபாரங்கள் சீராக இருக்கும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்ப பொருளாதார நிலை உயரும். கடன் சுமைகள் சிறுக சிறுக குறையும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். பெரிய மனிதர்களின் உதவிகளும் ஆதரவும் கிட்டும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் இருந்துவந்த மன ஸ்தாபங்கள் அகலும். வெளிவட்டாரத்தில் நல்ல மதிப்பு இருக்கும். கடன் தொந்தரவு ஓரளவு சீராகும். லாபகரமான தொழில் அமையும்,
புதிய முதலீடுகளால் நன்மைகள் உண்டாகும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தில் பல நல்ல திருப்பங்கள் உண்டாகும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். பண தட்டுப்பாடு நீங்கும்.உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வெளிநாட்டில் உத்யோகம் அமையும்.வெளிநாடு வேலைக்கான முயற்ச்சிகள் தொடங்கலாம்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்ப பெருமை உயரும். நெருக்கமான ஒருவரை பிரிய நேரிடும். சொத்து வாங்குவது, விற்பது குறித்த யோசனை வரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் மனக்குழப்பம் காணப்படும் யாருக்கும் வாக்குறுதிகள் வழங்காதீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் சிரமம் இருக்கும். வெளி உணவுகளை தவிர்க்கவும். உடல் நல குறைபாடுகள் தோன்றும். கணவன் மனைவி ஒற்றுமை பலம் பெரும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.தொழில் வியாபாரங்கள் சிறப்படையும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்ப வசதி, வாய்ப்புகள் பெருகும். புதிய வாகன யோகம் அமையும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துக்கள் மற்றும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். நண்பர்களுடன் கருத்து மோதல்கள் வந்து போகும். எதிர்பாராத செலவுகள் வரும். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். தொழில், வியாபாரம் விருத்தி பெறும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, நெருங்கிய உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பர்.நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். திட்டமிட்ட பயணங்கள் மகிழ்ச்சியை தரும். உத்தியோகத்தில் பணிசுமை கூடும்.
தொழில் வியாபாரங்கள் மந்தநிலை நீடிக்கும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, குடும்பத்தில் இழந்த சந்தோஷம் மீண்டும் வரும். அடுத்தவர்களை குறை சொல்ல வேண்டாம். வீண் கோபங்களால் சங்கடங்கள் வரும். பெற்றோர்களின் ஆலோசனை உதவியாக இருக்கும். உத்தியோக மாற்றம் வரும். சந்திராஷடமம் இருப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்.
image credit -Freepik