இன்று எதிர்பாராத மருத்துவ செலவை சந்திக்கும் ராசியினர் யார்?
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். இன்று முதல் தினசரி இராசி பலன்களை துல்லியமாக அறியலாம். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 20ம் தேதி 06-12-2023 புதன்கிழமை
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, கணவன் மனைவி உறவு பலப்படும் வருங்கால திட்டங்களை வகுப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கான பேச்சுக்கள் நடக்கும். புது பொருள் சேர்க்கை உண்டாகும்..உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த காரியம் நடக்கும். வீட்டில் சுப செலவுகள் இருக்கும். நண்பர்களிடம் மனம் விட்டு பேசவும். உத்யோகத்தில் வேலை பளு கூடும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்கும். விமர்சனங்களை கண்டுகொள்ள வேண்டாம். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பர்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, திட்டமிட்ட காரியம் தாமதமின்றி நடக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்ப பிரச்சனைகள் அகலும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். தேவையற்ற நட்பு வட்டாரங்களை குறைப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, பிரபலங்கள் அறிமுகமாவர். வாகனம் வழியில் சில செலவுகள் இருக்கும். உத்யோகத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். அனாவசிய பயணங்களை புறக்கணிக்கவும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். உத்யோகம் உயர்வு நிலை உண்டு.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பத்தில் மனநிம்மதி கிடைக்கும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்ப்புகள் அடங்கும். உத்யோகத்தில் விரும்பிய இட மாற்றம் உண்டு.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, எதிர்பாராத பணம் கைக்கு கிடைக்கும். குடும்பத்தின் பேராதரவை பெற முடியும். அடுத்தவருக்கு உதவும் எண்ணம் இருக்கும். கணவன் மனைவிடையே நல்ல ஒற்றுமை நிலவும். உத்யோகத்தில் ஏற்பட்ட தடங்கல் நீங்கும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, புத்தி கூர்மையால் எதையும் சாதிக்க முடியும். உடல் உபாதைகள் படிப்படியாக குறையும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும்.சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உற்றார், உறவினர்கள் எதிராக செயல்பட வாய்ப்புண்டு. கடன் பிரச்சனை ஓரளவு குறையும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.
image credit – Freepik






