
அடுத்தவர்கள் விவகாரத்தில் தலையிட கூடாத ராசி எது?
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். இன்று முதல் தினசரி இராசி பலன்களை துல்லியமாக அறியலாம். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 22ம் தேதி 08-12-2023 வெள்ளிக்கிழமை
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, உங்களால் மற்றவர்கள் பயனடைவர். பயணங்களால் புத்துணர்ச்சி ஏற்படும். புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்லும் பாக்கியம் கிட்டும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்பத்தில் மங்கள நிகழ்வு உண்டாகும். நண்பர்கள் உங்களை பற்றி உயர்வாக பேசுவர். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, புதுமையான திட்டங்களை தீட்டி அதை வழிவகை செய்ய முடியும். இல்வாழ்வில் இனிமை கூடும். கொடுக்கல், வாங்கலில் உஷாராக செயல்படவும். தொழில் மாற்றத்தில் விருப்பம் ஏற்படும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்பத்திற்கு தேவையானது கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புடைய காரியங்கள் ஆதாயம் தரும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, பொருளாதார நிலை உயரும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பர். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் வெளி ஆதரவு பெருகும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, பெற்றோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். பண சேமிப்பில் கவனம் செலுத்தவும். வெளிவட்டார தொடர்புகள் கிடைக்கும். உத்யோகத்தில் இருந்த தொந்தரவுகள் குறையும்.
ராசியில் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் இருக்கும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, ஆன்மீக ஈடுபாடு உண்டாகும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியும், ஆதாயங்களும் பெருகும். புது வாகனம் வாங்கும் யோசனை வரும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பத்திற்கு பெரிய நன்மைகள் கிடைக்கும். அடுத்தவர்கள் விவகாரத்தில் தலையிட வேண்டாம். மனதில் நல்ல எண்ணங்கள் உதிக்கும். கூட்டு தொழில் வியாபாரம் சிறக்கும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்பத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை நீங்கும். புது சொந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். காரிய தடை விலகும். புது தொழில் யோகம் அமையும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். பண வரவு சுமாராக இருக்கும். யாருக்கும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, அனுபவ அறிவை கொண்டு எதிலும் ஜெயிக்க முடியும். மனதில் இருந்துவந்த பயம் பதற்றம் நீங்கும். புதிய முயற்சிகள் கைகூடும். உத்யோகத்தில் கவனம் தேவை.
மீனம்
மீன ராசி நண்பர்களே, குடும்பத்தில் சலசலப்புகள் நீங்கி கலகலப்பு ஏற்படும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புதிய தொழில் முயற்சி வெற்றி தரும்.சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்.
image credit: Freepik