
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். இன்று முதல் தினசரி இராசி பலன்களை துல்லியமாக அறியலாம். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
இன்று வியாபாரத்தில் சாதிக்க கூடிய ராசியினர் யார் தெரியுமா?
சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 23ம் தேதி 09-12-2023 சனிக்கிழமை
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, கணவன் மனைவி உறவு பலப்படும் .குடும்ப மதிப்பை உயர்த்த முடியும். யாரிடத்திலும் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். பணவரவு தாமதப்படும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்ப செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வீடு மாறுவது குறித்து யோசனை வரும். சொந்த விஷயங்களை யாரிடமும் பகிர வேண்டாம். உத்யோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, எதிர்பார்ப்புகள் சீக்கிரத்தில் நிறைவேறும். பிரியமானவர்கள் பாசமழைப் பொழிவர். இரவு நேர வாகன பயணங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, திட்டமிட்டபடி பயணம் செய்ய முடியும். எதிர்பார்த்திருந்த காரியம் நிறைவேறும். கணவன் மனைவிக்குள் விவாதம் வந்துப் போகும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்பத்தின் ஆதரவை பெற முடியும். எதிலும் தீர யோசித்து முடிவு எடுப்பது நல்லது. திருமண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். உத்யோத்தில் வேலைச்சுமை குறையும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். மன அமைதிக்காக தியானம் செய்வது நல்லது. சேமிப்பில் கவனம் செலுத்தவும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உருவாகும். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதிர்மறை எண்ணங்களை மனதில் இருந்து நீக்கவும் மனக்குழப்பம் காணப்படும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்ப பெரியோர்களின் ஆசியை பெற முடியும். வீண் கோபம், மன உளைச்சல் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. எதிர்ப்புகள் அடங்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்பத்தின் மீது அக்கறையும், பாசமும் அதிகரிக்கும். எதிரிகள் அடிபணிந்து போவர். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. உத்யோகத்தில் பதவிகள் தேடி வரும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்ப நிதி நிலைமை சீர் பெரும். எதிர்பார்ப்புக்கு தகுந்தாற்போல் ஒருவர் அறிமுகமாவர். புது நட்பால் நன்மை வந்து சேரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, எதிர்காலம் பற்றிய சிந்தனை இருக்கும். யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பழகுவர். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
மீனம்
மீன ராசி நண்பர்களே, குடும்பத்தில் உங்கள் ஆலோசனை வரவேற்கப்படும். அடுத்தவர்கள் மனம் நோகும் படி பேச வேண்டாம். வெளிவட்டாரத்தில் பொறுமை அவசியம். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்.
image credit -Freepik