
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். இன்று முதல் தினசரி இராசி பலன்களை துல்லியமாக அறியலாம். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (99421 62388) கோபிசெட்டிப்பாளையம்.
இன்று வரவுக்கு மீறி செலவுகள் செய்ய வேண்டிய ராசியினர் யார் தெரியுமா?
சோபகிருது வருடம் கார்த்திகை மாதம் 15ம் தேதி 01:12:2023 வெள்ளிக்கிழமை:
எல்லோரும் வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற்று வளமாக வாழ்ந்திட இறைவனை வேண்டி தினசரி ராசிபலன்களை துல்லியமாக இங்கே கணித்து தந்திருக்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் கோபிசெட்டிப்பாளையம்.
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் தின பலன்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. வாழ்வில் வளம் பெற இறைவனை எப்போதும் நினைவில் நிறுத்துங்கள். கடினமான காலங்களும் கடினமில்லாமல் கடந்துபோகும்..
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். உணவில் கவனமும், சீரான ஓய்வும் ஆரோக்கியம் தரும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் இருக்கும். எதையும் தாங்கும் மனவலிமையை உண்டாகும். கடவுள் பக்தி அதிகரிக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, சுற்றி இருப்பவர்களின் சுயரூபம் புரியவரும். பொதுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பயணங்களால் அலைச்சல் வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். திட்டமிட்ட காரியம் கைகூடும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். தொழில், வியாபாரத்தில் லாபம் கூடும் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும் கவனம்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, சொந்த பந்தங்களுடன் இருந்த மனக்கசப்பு மாறும். காரிய அனுகூலம் உண்டாகும். வாகனங்களில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.
கன்னி
கன்னி ராசி நண்பபர்களே, பிரபலங்களின் தொடர்பு ஆதாயத்தை தரும். உறவினர்களுடன் சுமூக உறவு ஏற்படும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, நெருக்கமானவர்களால் வீண் அலைச்சல் ஏற்படும். திட்டமிட்ட வேலைகள் எந்தவித தடைகளின்றி முடியும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசி நண்பர்களே, உறவினர்களிடம் பகைமை உண்டாக வாய்ப்புண்டு. புதுமையான செயல்களில் ஆர்வம் கூடும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரிய வரும் மதியம் 12:17 வரை சந்திராஷ்டமம் நீடிக்கிறது கவனம்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்ப விஷயங்களை கையாளும் போது கவனம் தேவை. பண வரவு இருந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.மதியம் 12:17 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் தொடங்குகிறது
மகரம்
மகர ராசி நண்பர்களே, நாடி வந்தவர்களுக்கு வேண்டிய உதவியை செய்ய முடியும். யாரிடமும் விரோதத்தை வளர்க்க வேண்டாம். கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, கைகூடாத காரியம் கூட கைகூடி வரும். மனதில் இருந்த சோர்வுகள் அகன்று உற்சாகம் உண்டாகும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரம் சிறக்கும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, சவால்கள், விவாதங்களில் எதிர்கொண்டு ஜெயிக்க முடியும். புது நபர்களின் நட்பால் ஆதாயம் உண்டு. பண விஷயத்தில் கவனமாக இருக்கவும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
image credit – Freepik