
பொது ராசிபலன்கள் என்பது பொதுவான பலன்கள் ஆகும்.
பொது ராசிபலன்கள் என்பது சந்திரனை மையமாக வைத்து சொல்லக்கூடிய பலன்கள். இவை வெறும் ராசிக்கு மட்டுமே பொருந்தும் 90% நமது சுய ஜாதக பலன்களும் திசாபுத்திகளுகேற்பவே அமையும்.
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே,புதிய நபர்களின் சந்திப்பு நிகழும். வேண்டியவர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். எதையும் வெளிப்படையாக பேசுவது நல்லது. பயணங்களால் அலைச்சல் உண்டாகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்பத்தில் சிறு சிறு சண்டை சச்சரவுகள் வந்து போகும். முக்கிய வேலைகள் முடிவடையும். வீண் கோபம் பிடிவாத குணத்தை தளர்க்கவும். மற்றவர்கள் மனம் வருந்தும் படி பேச வேண்டாம். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்ப நபர்கள் உங்கள் பேச்சை கேட்டு நடப்பார்கள் . உறவினர்கள் பகைமை பாராட்டுவர். எதிர்த்து நின்றவர்கள் கூட விலகி நிற்பர்.வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். புதிய முதலீடுகளால் லாபம் இரட்டிப்பாகும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, மனதிற்கு ஒப்பாத செயலில் ஈடுபட வேண்டாம். கணவன் மனைவிக்குள் இருந்துவந்த மன ஸ்தாபங்கள் விலகும். தடைப்பட்ட வேலைகள் விரைவில் முடியும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்பத்தினரை அனுசரித்து செல்லவும். மனதில் ஒருவித தயக்கம், தடுமாற்றம் வந்துச் செல்லும். பணம் வரவில் தாமதம் இருக்கும். வியாபார விஷயமாக வெளியூர் பயணம் மேற்கொள்ளூவீர்கள். உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டு.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, நீண்ட கனவில் ஒன்று நிறைவேறும். பழமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். தொல்லை கொடுத்தவர் உதவுவர். தொழில், வியாபாரம் சீராக இருக்கும்.
மனக்குழப்பம் காண்ப்படும் அவசர முடிவுகள் தவிற்க்கவும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, உறவினர்கள் மூலமாக உதவிகள் கிடைக்கும். நண்பர்களுடன் சிறிய விரிசல்கள் வரக்கூடும். அடிப்படை வசதிகள் பெருகும். அடுத்தவரின் ஆலோசனைக்கு செவி சாய்க்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்ப சிக்கல்கள் வெகுவாக குறையும். கணவன் மனைவிக்குள் ஈகோ தலைத்தூக்கும்.அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். திருமண காரியம் கைகூடும்.பயணங்களால் அலைச்சல் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, வாகன பராமரிப்பு வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்கும். யாரையும் எளிதில் நம்ப வேண்டாம். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.தொழில் வியாபாரங்கள் மிதமான லாபத்தை தரும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, புதிய வாகன யோகம் உண்டு.குடும்ப தேவைகளை பூர்த்தி செய்ய இயலும். கணவன் மனைவிக்குள் விட்டு கொடுத்து போவது நல்லது. நட்பால் நன்மை உண்டு. பழைய பிரச்சனைக்கு நல்ல ஒரு தீர்வு வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, பொதுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.பெரிய மனிதர்களின் சந்திப்பு நிகழும் .நெருங்கிய உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். பெரியோர்களின் ஆதரவு பெருகும்..தொழில், வியாபாரம் சுமாராக இருக்கும்.
மீனம்
மீன ராசி நணபர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும் வருங்கால திட்டங்களை வகுப்பீர்கள். யாரிடமும் வாக்கு வாதம் செய்ய வேண்டாம். கடன் பிரச்சனை தலை தூக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உங்கள் கை ஓங்கும்.

ஜோதிடம் தொழிலாக தொடங்கி 11 வருடங்கள் ஆகின்றது
20 வருடங்களாக ஜோதிட ஆராய்ச்சி செய்து வருகிறேன்.
அஸ்ட்ரோ
வெ.பழனியப்பன்
ஜோதிஷ ஆச்சார்யா
கோபிசெட்டிபாளையம்.
9942162388