
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்
சோபகிருது வருடம் பங்குனிமாதம் 20ம் தேதி 02-04-2024 செவ்வாய்க்கிழமை.
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே,மனமகிழ்ச்சி காணப்படும். குடும்பத்தில் வரவு குறைவு என்றாலும், செலவுகள் குறையாது.பண விவகாரங்களில் கவனம் தேவை .உடல் ஆரோக்கியம் மேம்படும். பழைய வாகனத்தை மாற்ற வேண்டிவரும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, சொந்த பந்தங்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நெருங்கியவர்களால் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.சந்திராஷடமம் இருப்பதால் கவனமும் நிதானமும் அவசியம். வீண் விவகாரங்களில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்துடன் பயணம் செய்ய விருப்பம் ஏற்படும். மன உளைச்சல் நீங்கி தெளிவு பிறக்கும். புதிய நபர்களால் அனுகூலங்கள் உண்டாகும். பண வரவு சுமாராக இருக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, விருந்தினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். உறவினர்களால் நன்மைகள் உண்டு.அலைச்சல் அதிகமாக காணப்படுமம.உணவு கட்டுப்பாடு அவசியம். கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்பத்தில் முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கும். பெரியோர்கள் ஆதரவு கிடைக்கும். அசதியும், சோர்வும் அவ்வப்போது வந்து போகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.தொழில் வியாபாரத்தில் மந்தநிலை நீடிக்கும் புதிய முதலீடுகள் தவிர்க்கவும்
கன்னி
கன்னி ராசி நண்பர்களே,உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். மற்றவர்கள் உங்களை வெகுவாக பாராட்டுவர். மறைமுகமான எதிர்ப்புகள் விலகும். விட்டுகொடுத்து போவது நல்லது.திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, வெளிவட்டார பழக்கங்கள் அதிகரிக்கும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.புத்தி கூர்மையால் சாதிப்பீர். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.உத்யோகத்தில் நற்பெயர் கிடைக்கும் தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்ப பொருளாதாரத்தில் சிக்கல் வரும். கடன் வாங்கும் சூழல் உருவாகும்.தடைபட்ட உறவு மீண்டும் துளிர்க்கும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும்.தொழில் வியாபாரங்கள் லாபத்தை தரும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்ய முடியும். புதியவர்கள் நட்பால் ஆதாயம் உண்டு. அலைச்சல்.அதிகமாகும்.திடீர் மருத்துவ செலவுகள் வரும்.உணவு கட்டுப்பாடு அவசியம். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவும். யாரிடமும் கோபத்தை காட்ட வேண்டாம். ஆலோசனைக்கேட்டு முடிவுகள் எடுக்கவும். புதிய முயற்சிகள் கைகூடும். பெற்றோர்கள் விருப்பங்களை நிறைவேற்ற முடியும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே,புது உத்வேகம் பிறக்கும். எதிர்பார்த்த காரியம் நிறைவேறும். உறவினர்களால் சில தொல்லைகள் வரும். யாருக்கும் பணம் கைமாற்று செய்யாதீர்கள்.வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். மனம் மகிழும் சம்பவம் ஒன்று நடக்கும். யாருக்கும் வாக்குறுதியும் தர வேண்டாம். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.தொழில் எதிரிகள் விலகுவார்கள்.உத்யோகத்தில் நற் பெயர் கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் சிறப்படையும்.
Image credits: Freepik