
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்
குரோதி வருடம் சித்திரை மாதம்-19 02.05.2024 வியாழன் கிழமை
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே,யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். எதிரிகளின் பலம், பலவீனம் அறிந்து செயல்படவும். முன் கோபத்தைக் குறைத்துக்கொள்ளவும். புதுமையான விஷயங்களில் ஈடுபாடு வரும். உத்யோகத்தில் கெடுபிடிகள் குறையும்
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்பத்தை பற்றிய உயர்வான எண்ணம் இருக்கும். கணவன் மனைவிக்குள் நல் இணக்கம் உண்டாகும். உறவினர்கள் சிலர் உதவி கேட்டு வருவர்.பண விவகாரங்களில் கவனம் தேவை. பெற்றோர்களிடம் அன்பு அதிகமாகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, நிதி நெருக்கடியை சமாளிக்க முடியும். சுய கௌரவத்தை விட்டு தர வேண்டாம். வாகனங்களில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமும் நிதானமும் மிக அவசியம்.அவசர முடிவுகள் தவிற்க்கவும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்பத்தில் உங்கள் சொல்லுக்கு மதிப்பு கூடும். திட்டமிடாத செலவுகள் வரும். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.கணவன், மனைவிக்குள் இருந்த மன போர் நீங்கும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, எதிர்கால கனவில் ஒன்று நிறைவேறும்.பண வரவு நன்றாக இருக்கும். கொடுக்கல், வாங்கல் சீராக இருக்கும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் செழிப்பபை தரும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குல தெய்வ வழிபாடு சிறப்பாக அமையும். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.பெரிய மனிதர்களின் உதவிகள் கிட்டும். பிரியமானவர்களின் சந்திப்பால் மனமகிழ்ச்சி ஏற்படும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, அடுத்தவர்களுக்காக முக்கிய பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். யாருக்காகவும் உங்களை மாற்றிக்கொள்ள வேண்டாம்.பண வரவு தடைப்படும். நட்பு வழியில் சில சங்கடங்கள் வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பத்தில் வீண் சண்டை, சச்சரவு வந்துப் போகும்.நண்பர்களால் அவப்பெயர் உண்டாகும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, மன மகிழ்ச்சி காணப்படும்.காரிய தடைகள் விலகும்.குடும்ப சவால்களை எதிர்கொள்ள முடியும். எதிர்பார்த்த காரியங்கள் தாமதமின்றி முடியும். வீடு மாற்றலாகி செல்லக்கூடும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். கடன் வாங்குவதை தவிர்க்கவும்.தேக ஆரோக்கியம் பலம் பெறும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்ப பொறுப்புகள் அதிகமாகும். கடன்கள் சிறுக சிறுக அடைபடும்.உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பர். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் அமைதி நிலவும்
மீனம்
மீன ராசி நண்பர்களே, பண தேவைகள் அதிகரிக்கும்.ஆடம்பர சிலவுகளை குறைக்கவும். பிடிவாதப் போக்கை கைவிடவும். மனதில் உள்ளதை ஒளிவு மறைவின்றி பேசவும். கணவன் மனைவிக்குள் ஈகோ பார்க்ககூடாது.திட்டமிட்டு செய்யும் காரியம் வெற்றி பெறும். தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும்.
Image credits: Freepik