
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
சோபகிருது வருடம் மாசி 21ம் தேதி 05-03-2024 செவ்வாய் கிழமை
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, குடும்பத்தில் சண்டை, சச்சரவுகளை தவிர்க்கவும். தியானத்தால் மனம் நிம்மதி அடையும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். மனதில் நினைத்த முக்கிய தேவைகள் நிறைவேறும்.உத்யோகத்தில் பாராட்டுகள் கிடைக்கும். புது தொழில் யோகம் அமையும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, பெற்றோர்களிடம் அன்யோன்யம் ஏற்படும். உறவினர்களால் ஏற்பட்ட தகராறுகள் அகலும். வாகனத்தில் பொறுமையாக செல்லவும்.அலைச்சல் அதிகமாக காணப்படும். தொழில், வியாபாரம் செழிப்படையும். சந்திராஷ்டமம் நீடிப்பதால் கூடுதல் கவனம் தேவை.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படவும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். அனாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும்.வீண் வம்புகளில் மாட்டிக்கொள்ளாதீர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்.தீர விசாரித்து முடிவுகள் எடுங்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஒங்கும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, செய்யும் காரியத்தில் நிதானமும், செயலில் விவேகமும் தேவை. அவசர முடிவுகள் அறவே நீக்கவும்.குடும்பத்தாருடன் கலந்தாலோசித்து எந்த முடிவுகளும் எடுக்கவும். தேவையற்ற மனபயத்தை நீக்கவும். வாகன யோகம் உண்டு. உத்யோத்தில் அலைச்சல் இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்ப பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்படும்.கடன் வாங்கும் சூழல் ஏற்படும். கணவன் மனைவிக்குள் வாக்குவாத்கள் தவிற்பது நல்லது. பல நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். உடல் சோர்வு நீங்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டு.தொழில் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை நீங்கும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, பேச்சு திறன் கூடும். புதுமையான முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். உறவினர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும்.பண விவகாரத்தில் உஷாராக இருங்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். புதிய முதலீடுகளால் வருங்காலத்தில் லாபம் இரட்டிப்பாகும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, கடந்த சில தினங்களாக இருந்த மன சங்கடம் நீங்கும்.உற்சாகமாக காணப்படுவீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவர். அவர்களின் உதவிகளும் கிடைக்கும்.கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பத்தில் உங்கள் ஆலோசனை வரவேற்கப்படும். ஆன்மிக எண்ணம் மேலோங்கும். சொத்து வழக்கில் வில்லங்கம் இருக்கும்.பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். உத்யோகத்தில் பணி சுமை கூடும்.
தொழில் வியாபரங்கள் சீராக இருக்கும்
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, உங்கள் பலம் மற்றும் பலவீனத்தை உணர முடியும். உடன்பிறப்பு வகையில் சில நெருக்கடிகள் வரும். வேண்டியவர்களிடம் வாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் சீராகும்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பங்கள் உண்டாகும் யாருக்கும் வாக்குறுதிகளை வழங்காதீர்கள்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, சொந்த பந்தங்களால் அனுகூலமான பலன் உண்டு. திடீர் திருப்பங்கள் ஏற்படும். உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்ப வரவு, செலவு கட்டுப்பாட்டில் இருக்கும். உடல் நலம் பலம் பெறும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும்.யாருக்கும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம்.பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உயர்வு நிலை உண்டு
மீனம்
மீன ராசி நண்பர்களே, வீண் கோபத்தால் பகை உண்டாகும்.யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமண காரியம் விரைவில் கைகூடும். உத்யோகத்தில் பாராட்டுகள் கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் செழிப்படையும்.
Image credits: Freepik