
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, மனம் சந்தோஷம் அடையும்.யாருக்கும் அவசரப்பட்டு வாக்கு தர வேண்டாம். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். நண்பர்கள் நல்ல ஒத்துழைப்பை தருவர். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரிய வரும்
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்ப பெருமையை உயர்த்த முடியும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவர்.ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்ப நலனில் அதிக அக்கறை உண்டாகும். மறைந்துக் இருக்கும் திறமைகள் வெளிப்படும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, திட்டமிட்ட காரியங்கள் நடந்தேறும் மனதில் புது தெம்பும், தைரியமும் அதிகரிக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. பெற்றோர் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, சமூக அந்தஸ்து உள்ளவர்களின் தொடர்பு கிட்டும். எதை செய்வது, எதை விடுவது என்ற குழப்பம் ஏற்படும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். மனதில் தேவையற்ற சிந்தனைகளை வைக்க வேண்டாம். கணவன் மனைவிடையே அன்யோன்யம் இருக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.தொழில் வியாபாரங்கள் செழிப்படையும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். தெய்வீக ஈடுபாடு உண்டாகும். கடினமான காரியங்களையும் எளிதாக செய்ய முடியும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெறும்.வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே,நினைத்தது நடக்கும் உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவர். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்ய முடியும். சிக்கனமாக செலவழித்து சேமிக்க பழகவும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்ப தேவைகள் அதிகரிக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் கூடும். புது நண்பர்களின் அறிமுகம் உற்சாகம் தரும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, எதிர்காலம் பற்றிய கனவு இருக்கும். பயணங்களால் அலைச்சலும், ஆதாயமும் ஏற்படும். பிராத்தனைகள் நிறைவேறும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். முக்கிய நபர்களின் சந்திப்பு நிகழும். நெருக்கமானவர்களுடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, குடும்ப சுமையை ஏற்க வேண்டிவரும். மனம் புத்துணர்வு பெறும். அக்கம் பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போகவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.தொழில் வியாபாரங்கள் சிறக்கும்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் யாருக்கும் வாக்குறுதிகளை வழங்க வேண்டாம்
Image credits: Freepik