
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்
சோபகிருது வருடம் பங்குனிமாதம் 26ம் தேதி 08-04-2024 திங்கள் கிழமை
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, பல வேலைகளை ஒரே நேரத்தில் பார்க்க வேண்டிவரும்.சுபகாரியத்துக்கான பேச்சுக்கள் நடக்கும். பெற்றோரின் நன்மதிப்பை பெற முடியும். உற்றார், உறவினர்கள் உறுதுணையாக இருப்பர். உத்யோக மாற்றம் ஏற்படும். தொழில் வியாபாரங்கள் செழிப்படையும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்ப செல்வ நிலை உயரும். புதுமையான யோசனைகள் உதிக்கும். புத்தி கூர்மையால் தடைபட்ட காரியம் ஒன்று நடைபெறும்.வெளிவட்டாரத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும்.தொழில் வியாபாரங்கள் லாபத்தை தரும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் அத்தியாவசிய செலவுகள் கூடும். வாக்கு சாதுரியம் ஏற்படும். ரகசியங்களை யாரிடத்திலும் விவாதிக்க வேண்டாம். உத்யோகத்தில் புது பொறுப்புகள் வரும்.தொழில் வியாபரங்கள் முன்னேற்றம் ஏற்படும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். முக்கிய நபர்களின் சந்திப்பு நிகழும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமும் நிதானமும் மிக அவசியம்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, மனதில் போட்டு வைத்த திட்டம் நிறைவேறும். சிக்கனத்தை கடைப்பிடிப்பது நல்லது.கடன் வாங்குவதை கூடுமானவரை தவிர்க்கவும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.கோயில் தலங்களுக்கு செல்ல முடியும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்ப தேவைகள் அதிகமாகும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். யாருக்காகவும் உங்களை மாற்ற முயற்ச்சி செய்யதீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தில் மனநிம்மதி ஏற்படும்.கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும். தடைப்பட்ட வேலைகள் சீக்கிரத்தில் முடியும். வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டு. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குல தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளவும். எதிலும் முன்யோசனையுடன் செயல்படவும். யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்கள்.நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, சொந்த பந்தங்களால் நன்மை உண்டு. விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். எதிரிகளால் இருந்த இடையூறுகள் நீங்கும்.தொழில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும்.வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்பத்தில் ஆதரவு பெருகும். எதிர்பார்த்த வேலைகள் தாமதமின்றி முடியும். உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும்.கடன் தொந்தரவு இருக்கும். தொழில், வியாபாரத்தில் மேன்மை நிலை உண்டாகும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, பல புரியாத விஷயங்கள் கூட எளிதில் புரிய வரும். யாருக்கும் வாக்குறுதியும் தர வேண்டாம். மனதை மகிழ்விக்கும் சம்பவம் ஒன்று நடக்கும். உத்யோகத்தில் கவனம் தேவை.தொழில் வியாபரத்தில் உள்ள சூட்சுமங்கள் தெரிய வரும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, குடும்ப சுமை நாளுக்கு நாள் கூடும். தேவையற்ற செலவுகளை குறைக்க பார்க்கவும். கணவன் மனைவிக்குள் ஈகோ உருவாகும் யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
Image credits; Freepik