Uncategorizedஆன்மிகம்ராசிபலன்

இன்றைய ராசிபலன் 08 மே புதன் கிழமை

இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்

குரோதி வருடம் சித்திரை மாதம் 25, 08.05.2024 புதன்கிழமை

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்களால் நன்மைகள் உண்டாகும்.பண வரவில் தாமதம் இருக்கும்.ஆடம்ப சிலவுகள் குறைப்பது நலம். புது நபர்களை நம்பி எதிலும் ஏமாற வேண்டாம். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசி நண்பர்களே, உங்களால் மற்றவர்கள் பயனடைவர். மனதில் புது உற்சாகம் பிறக்கும். துணிச்சலாக எதையும் செய்வீர்கள்.கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் ஏற்படும். அத்தியாவசிய தேவைகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே, குடும்ப சுமைகள் அதிகமாகும். அடுத்தவர் தவறுகளை சுட்டி காட்ட வேண்டாம்.கணவன் மனைவிக்குள் தேவையற்ற சண்டைகள் உண்டாகும் . காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கடகம்

கடக ராசி நண்பர்களே, எதிர்ப்புகளைச் சமாளித்து வெற்றிநடை போட முடியும். பொருளாதார நிலை சீராக இருக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு.புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

சிம்மம்

சிம்ம ராசி நண்பர்களே, குடும்பத்தில் சிக்கனத்தை கடைபிடிக்கவும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் வேலைப்பளு கூடும்.இன்றும் சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.

கன்னி

கன்னி ராசி நண்பர்களே, பெற்றோர்களின் ஆலோசனை நம்பிக்கை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.வெளி நபர் யாரையும் பகைத்துக் கொள்ளவேண்டாம். அனாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

துலாம்

துலாம் ராசி நண்பர்களே,காரிய தடைகள் விலகும். பகைவர்கள் விலகி நிற்பர். ஒவ்வாத உணவு வகைகளை எடுத்துக்கொள் வேண்டாம். உடல் நலனில் கவனம் தேவை.அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களே, இழுபறியாக இருந்த வேலைகள் சீக்கிரத்தில் முடியும். உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பண விவகாரங்களில் கவனம் தேவை.எதிர்ப்புகள் அடங்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

தனுசு

தனுசு ராசி நண்பர்களே, குடும்ப வாழ்வு மேன்மையடையும்.கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும்.ஆன்மீக எண்ணங்கள் உதிக்கும். பிராத்தனைகள் நிறைவேறும். திடீர் மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

மகரம்

மகர ராசி நண்பர்களே, எதிர்பார்ப்புகள் சீக்கிரத்தில் நிறைவேறும். புதியவரின் நட்பால் உற்சாகம் ஏற்படும். உடல் உபாதைகள் நீங்கும். சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள்.உத்யோகத்தில் நன்மதிப்பை பெற முடியும்.தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தின் மேல் பற்று அதிகமாகும். பெரியோர்கள் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கவும். வீண் அலைச்சல் ஏற்படும். உணவு விஷயத்தில் எச்சரிக்கை தேவை. தொழில், வியாபாரம் சிறக்கும்.

மீனம்

மீன ராசி நண்பர்களே,நினைத்த காரியம் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.மனதுக்கு இனிய செய்தி கிடைக்கும். மன வலிமை கூடும். முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

Image credits: freepik

What's your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *