
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, பழமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். பிராத்தனைகள் நிறைவேறும். வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம்.கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். ஏற்றம் தரும் விதத்தில் பொருளாதாரம் உயரும். தேக நலனில் அக்கறைகொள்ளவும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.தொழில் வியாபாரத்தில் மந்தநிலை காணப்படும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, எதிர்பார்த்த வேலைகள் தாமதமின்றி முடியும். மனகஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்ப வாழ்வில் நெருக்கடிகள் குறையும். எதிலும் தீர யோசித்து முடிவு எடுக்கவும்.பண தேவைகள் பூர்த்தியாகும். நெருக்கமானவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்பம் முன்னேற்ற பாதையில் செல்லும். புதிய முயற்சிகள் பலிதமாகும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். வெளிவட்டாரத்தில் சில சிக்கல்கள் வரும். சேமிப்பிற்கு எதிர்பாராத செலவுகள் வரும்.தேவையின்றி கடன் வாங்காதீர்கள். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, உறவினர்களுடன் மோதல் வந்து விலகும். எதிரிகளின் பலம், பலவீனம் அறிந்து செயல்படவும். அடிக்கடி பயணத்தால் அலைச்சல் ஏற்படும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் தேவை
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பத்தில் குதூகலம் நிறையும். மற்றவர்களுடன் விவாதங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது. மனம் தெளிவு பெறும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, முக்கிய வேலைகளை அலைந்து திரிந்து முடிக்க வேண்டிவரும். பராமரிப்பு செலவுகள் கூடும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
மகரம்
மகரம் ராசி நண்பர்களே, பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். புது நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். வராமல் நின்று போன பணம் கைக்கு வரும். நினைத்த காரியம் நிறைவேறும்.உத்யோகத்தில் அமைதி நிலவும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, தனிப்பட்ட ரகசியங்களை வெளியில் பகிர வேண்டாம். மனதில் பக்தி எண்ணம் மேலோங்கும். பிரியமானவர்களிடம் விட்டுக்கொடுக்க போகவும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
Image credits: Freepik