
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்
குரோதி வருடம் சித்திரை மாதம் 24, 07.05.2024 வியாழக்கிழமை
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே,சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும்.கணவன் மனைவிக்குள் வாக்குவாதங்கள் தவிற்க்கவும் ஆன்மீக நாட்டம் கூடும். சொந்த பந்தங்கள் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, மன மகிழ்ச்சி காணப்படும்.கையில் எடுத்த காரியம் கச்சிதமாக முடியும். பிரியமானவர்கள் ஆதரவாக இருப்பர். புதிய வழியில் வருமானம் வரும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் செழிப்பைத்தரும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, செல்லும் இடத்தில் நல்ல வரவேற்பு கிடைக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உறவினர்களால் மன சங்கடங்கள் வரும்.பண விவகாரங்களில் கவனம் தேவை. புதுத் தொழில் யோகம் அமையும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, காரிய தடைகள் விலகும்.புதிய திட்டங்கள் நிறைவேறும். யாரையும் யாரிடத்திலும் பரிந்துரை செய்யவேண்டாம். கணவன் மனைவிக்குள் இருந்த மனவருத்தம் நீங்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே,புதிய முயற்ச்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க முடியும். எதையும் ஒளிவு மறைவின்றி பேசுவது நல்லது. அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தில் உங்கள் புகழ் ஓங்கும். திறமையான பேச்சு காரியம் சாதிக்க உதவும். பொழுது போக்கு, நிகழ்ச்சிகளில் ஆர்வம் கூடும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமும் நிதானமும் மிக அவசியமாகும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, நிதி நிலைமை வெகுவாக உயரும்.திடீர் பண வரவால் மகிழ்ச்சி உண்டாகும்.தேவைகள் பூர்த்தியாகும். அக்கம் பக்கத்தினருடன் ஒற்றுமை நிலவும். யாரிடமும் வம்பு, வழக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பத்தில் ஆதரவு பெருகும். வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம். அவசர முடிவுகள் தவிற்க்கவும்.பெண்கள் வழியில் சில பிரச்சனைகள் வரும்.முன் கோபம் வேண்டாம். உத்யோக மாற்றம் ஏற்படும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, உங்கள் காரியங்களை நிறைவேற கூடுதல் முயற்சி தேவைப்படும்.அலைச்சல் அதிகமாகும். நட்பால் நன்மை வந்து சேரும். உணவு கட்டுப்பாடு அவசியம்.எதிர்ப்புகள் தானாக அடங்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, முக்கிய தேவைகள் நிறைவேறும்.பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். பெரியவர்களின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்கவும். சீரான ஓய்வு புத்துணர்ச்சியை தரும். தொழில், வியாபாரத்தில் பொறுப்புகள் கூடும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தினர் மனமுவந்து பாராட்டுவர். உறவினர்கள் வழியில் ஆதாயம் உண்டு. வீண் வாதங்களை தவிர்க்கவும்.யாரையும் பகைத்துக்கொள்ளாதீர்.உத்யோகத்தில் நற்பெயர் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, காணமல் போன பொருள் ஒன்று கிடைக்கும்.குடும்ப கௌரவம் உயரும். பண தேவைகள் பூர்த்தியாகும்.மனதில் அமைதி நிறைந்திருக்கும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.
Image credits: Freepik