ஆன்மிகம்ராசிபலன்

இன்றைய ராசிபலன் 10 ஏப்ரல் புதன் கிழமை

இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்

சோபகிருது வருடம் பங்குனிமாதம் 28ம் தேதி 10-04-2024 புதன் கிழமை

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே, காரிய தடைகள் உண்டாகும்.மன பாரம் அதிகரிக்கும்.மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவது நல்லது. யாரை நம்புவது என்ற குழப்பம் வரும். பெற்றோரின் அரவணைப்பு கிட்டும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.

ரிஷபம்

ரிஷப ராசி நண்பர்களே, குடும்ப நபர்களின் அன்பும், ஆதரவும் கிட்டும். முக்கிய தேவைகள் பூர்த்தியாகும். வம்பு, வழக்குகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.யாரையும் பகைத்துக்கொள்ளாதீர் உத்தியோக மாற்றம் எற்படும்.தொழில் வியாபாரங்கள் மிதமாக இருக்கும்

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே,கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும். குடும்பத்தில் எதிர்பார்த்த மாற்றம் வரும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும்.

கடகம்

கடக ராசி நண்பர்களே, இஷ்ட தெய்வ வழிபாடு நல்ல பலன் தரும். கேட்ட இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.பெரிய மனிதர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். பிரியமானவர்களிடம் மனவருத்தம் ஏற்படும். புது தொழில் யோகம் அமையும்.

சிம்மம்

சிம்ம ராசி நண்பர்களே, தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். பண விஷயத்தில் அலட்சியம் வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துக்கள் இடாதீர்கள்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.

கன்னி

கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்து காணப்படும். கணவன் மனைவி உறவு பலப்படும்.உடல் நலம் சீராகும். வெளிவட்டாரத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.தொழில் வியாபாரங்கள் செழிப்பைத்தரும்.

துலாம்

துலாம் ராசி நண்பர்களே, யோசிக்காமல் யாருக்கும் எந்த வாக்குறுதியும் தர வேண்டாம். பிரியமானவர்கள் அன்பு பாராட்டுவர். கடன் பிரச்சனை ஓரளவு குறையும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.தொழில் வியாபாரங்கள் மிதமான வருவாயை தரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களே, மனம் மகிழ்ச்சிக்கான செய்தி ஒன்று வரும். உற்றார், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். புது நண்பர்கள் அறிமுகமாவர்.புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

தனுசு

தனுசு ராசி நண்பர்களே, குடும்ப சிக்கல்கள் வெகுவாக குறையும்.பண வரவு நன்றாக இருக்கும் . சவால்கள், விவாதங்களில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மகரம்

மகர ராசி நண்பர்களே, குடும்பத்தினரிடம் மனம் விட்டு பேசவும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை மாறும். உத்தியோகத்தில் அமைதி நிலவும்.தொழில் வியாபாரத்தில் புதிய முதலீடுகளால் லாபம் பன்மடங்கு உயரும்.

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே, குடும்ப சுமை அதிகரிக்கும். சோம்பல் சுறுசுறுப்பின்மை காணப்படும்.நீண்ட நாள் திட்டங்களில் ஒன்று நிறைவேறும். அலைச்சல் அதிகமாகும்.உணவு கட்டுப்பாடு அவசியம்.நிறைய தண்ணீர் பருகவும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும்.

மீனம்

மீன ராசி நண்பர்களே,கனவு திட்டம் ஒன்று நிறைவேறும். மற்றவர்களிடம் நயமாக பேசி காரியம் சாதிக்க முடியும். இனந்தெரியாத கவலைகள் வந்து போகும். சுற்று வட்டாரத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

Image credits: Freepik

What's your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0

You may also like

1008 முருகன் போற்றிகள்
ஆன்மிகம்

கந்தனுக்கு உகந்த கந்தர் கலிவெண்பா பாடல் வரிகள்

கந்தன்..முருகன்.. என்றாலே அடுத்து நினைவுக்கு வருவது அருணகிரிநாதர். 51 விருத்தப்பாக்களால் ஆன கந்தர் அனுபூதி என்பது கந்தனுக்கு உரிய பாடல்களில் ...
இன்றைய ராசி பலன்
ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 04 செவ்வாய்க் கிழமை

பொது ராசிபலன்கள் என்பது பொதுவான பலன்கள் ஆகும். பொது ராசிபலன்கள் என்பது சந்திரனை மையமாக வைத்து சொல்லக்கூடிய பலன்கள். இவை ...
clock on the table with sun and tree
ஆன்மிகம்

இன்றைய பஞ்சாங்கம் 04 பிப்ரவரி செவ்வாய் கிழமை

பஞ்சாங்கம் படிப்பதால் உங்களுக்கு தினமும் கிடைக்கும் நன்மைகள் வாரத்தை ( நாள்) சொல்லுவதால் ஆயுள் வளரும். திதியை கூறுவதால் ஐஸ்வரியம் ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

hindu marriage ஆன்மிகம்

பிப்ரவரி 2025 முக்கிய விரத தினங்கள்.. சுபமுகூர்த்த நாட்கள்.. முழு விவரம் இதோ!

பிப்ரவரி 2025: தைத்திருநாளுக்கு பிறகு  திருமண வைபவங்கள் அதிகமாக நடைபெறும் மாதம் இந்த பிப்ரவரி மாதம். தை மாசி இணையும் ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 01 சனிக்கிழமை

பொது ராசிபலன்கள் என்பது பொதுவான பலன்கள் ஆகும். பொது ராசிபலன்கள் என்பது சந்திரனை மையமாக வைத்து சொல்லக்கூடிய பலன்கள். இவை ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் 31 ஜனவரி 2025 வெள்ளிக்கிழமை

மேஷம் இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். குடும்பத்தினருடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து ஒற்றுமை நிலவும். ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் 30 ஜனவரி 2025 வியாழக்கிழமை

மேஷம் மேஷ ராசி நண்பர்களே, மனதிற்கினிய நற் செய்தி ஒன்று கிடைக்கும்.நட்பு முறையில் ஒருவித தயக்கம், தடுமாற்றம் வந்துச் செல்லும். ...