
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
சோபகிருது வருடம் மாசி மாதம் 28’ம் தேதி 11-03-2024 திங்கட்க்கிழமை..
மேஷம்.
மேஷ ராசி நண்பர்களே, குடும்பத்தில் முக்கிய விஷயங்கள் நடக்கும். மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.பெற்றோர்களின் ஆசி கிட்டும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். உத்யோகத்தில் சில நெருக்கடிகள் வரும்.தொழில் வியாபாரங்கள் செழிப்பை தரும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்பத்தில் எதிர்பார்த்த மாற்றம் வரும். பிரியமானவர்களின் வருகை இருக்கும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. உணவு கட்டுப்பாடு அவசியம்.தொழில், வியாபாரத்தில் நிறைய சாதிக்க முடியும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவு நீங்கும். உறவினர்களால் வீண் அலைச்சல் ஏற்படும்.பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை. திட்டமிட்ட வேலைகள் தடைகளின்றி முடியும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். பெற்றோர்களின் ஆதரவு பெருகும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமும் நிதானமும் அவசியம்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, நேற்றைய பிரச்சனைக்கு இன்று நல்ல முடிவு வரும். பிடிவாத போக்கை கொஞ்சம் தளர்த்திக் கொள்ளவும்.முன் கோபத்தால் பிரச்சனைகள் தேடி வரும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தில் மனநிறைவு ஏற்படும்.கணவன் மனைவி உறவு பலப்படும். மன உளைச்சல் நீங்கி தெளிவு பிறக்கும். பாதியில் நின்ற வேலைகள் சீக்கிரத்தில் முடிவடையும். உத்யோகத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் புதிய முதலீடுகள் தவிர்க்கவும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, எதிர்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வெளிவட்டாரத்தில் அவப்பெயர் உண்டாகும்.பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். ஆன்மிக நாட்டம் ஏற்படும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, அநாவசியச் செலவுகளை குறைத்துக்கொள்ளவும். திட்டமிட்டபடி பயணம் செய்ய முடியும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.தொழில் வியாபாரம் சிறப்படையும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, மனக்குறைகளை வெளியில் சொல்ல வேண்டாம். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும்.புதிய வாகன யோகம் உண்டு. சவாலான வேலை களையும் சாதாரணமாக செய்ய முடியும். தொழில், வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, சொந்த பந்தங்களுடன் இருந்த மனக்கசப்பு மாறும். திட்டமிட்ட காரியங்களில் திடீர் மாற்றம் ஏற்படும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.தொழில் வியாபாரங்கள் சீராக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போகவும். சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு கூடும்.சகோதரர்களடம் நல் இணக்கம் ஏற்படும். திருமணம் காரியம் கைகூடி வரும். தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, எதிர்பார்ப்புகள் நாளடைவில் பூர்த்தியாகும். நண்பர்களிடம் மனம் கோணாமல் நடந்துகொள்ளவும். முன் கோபத்தை தவிர்க்கவும். துணிச்சலாக முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். தொழில், வியாபாரம் சிறக்கும்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும்.
Image credits: Freepik