
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, நற்செய்தி ஒன்று கிடைக்கும். சுற்றியுள்ளவர்கள் ஆதரவால் மனம் மகிழ்ச்சி ஏற்படும். காரிய அனுகூலம் உண்டாகும். அலைச்சல் அதிகமாக காணப்படும் உஷ்ண நோய் உண்டாகும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரக்கூடும். புது தொழில், யோகம் அமையும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, தேவையற்ற டென்ஷன் குறைக்கவும் யாரிடமும் கோபத்தை காட்டாதீர்கள். குடும்ப நலனில் அக்கறை கொள்ளவும். எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும். நல்ல செய்தி ஒன்று காதில் வந்து விழும். தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே,நினைத்த காரியம் நடக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் தீரும்.கணவன் மனைவி உறவு பலப்படும். பொருளாதார நிலை வெகுவாக உயரும். புது வீடு, மனை வாங்குவது குறித்த யோசனை வரும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
கடகம்
கடக ராசி நேயர்களே, மனதில் துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தேவைக்கு ஏற்ப பொருள் வரவு இருக்கும்.முன் கோபத்தால் பிரச்சனைகள் வரும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். அலைச்சல் அதிகமாக காணப்பட்டாலும் வருமானம் நன்றாக இருக்கும். விருப்ப உத்யோக மாற்றம் ஏற்படும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்பத்தில் பல நல்ல சம்பவங்கள் நடக்கும். மற்றவர்கள் விமர்சனத்திற்கு செவி சாய்க்க வேண்டாம். இயல்பாக இருங்கள்.யாருக்காகவும் உங்களை மாற்றிக்கொள்ள வேண்டாம்.தொழில், வியாபார தொடர்பான பயணங்கள் இருக்கும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, தள்ளி போன காரியங்கள் விரைவில் முடியும். உறவினர்கள் உதவி கேட்டு தொந்தரவு செய்வர். அன்னிய மொழிக்காரர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்.வாகன பராமரிப்பு செலவு கூடும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் சீராக இருக்கும்.
துலாம்
துலாம் ராசி நேயர்களே,காரிய தடைகள் விலகும் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். பயணங்கள் தள்ளி போகும். பிரியமானவர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும்.உடல் நலனில் கவனம் கொள்ளவும். தொழில் போட்டிகள் குறையும். வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே,உற்சாகமாக காணப்படுவீர்கள்.மனதிற்கினிய நற்செய்தி ஒன்று கிடைக்கும். குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். மன மகிழ்ச்சி கூடும் நாள். கணவன் மனைவி உறவில் குதூகலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே,ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும் கோயில் தலங்களுக்கு செல்ல முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பிரியமானவர்களின் வருகை உற்சாகம் தரும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, பெற்றோர்களின் ஆசைகளை நிறைவேற்ற முடியும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். சொத்து பிரச்சனை முடிவுக்கு வரும். தொழில், வியாபாரம் விரிவாக்கம் ஏற்படும். மனக்குழப்பம் காணப்படும்.யாருக்கும் வாக்குறுதிகளை வழங்க வேண்டாம்
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, எந்த விஷயத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் ஏற்படும். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும்.ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை கூடும்.தொழில் வியாபாரங்கள் மிதமான லாபத்தை தரும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, குடும்ப சூழ்நிலை ஓரளவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. கணவன் மனைவிடையே ஒற்றுமை பலப்படும். உறவினர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும் வருங்கால திட்டங்கள் நிறைவேறும்.தொழில், வியாபாரத்தில் வாய்ப்புகள் தேடி வரும்.
Image credits: Freepik