
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்
சோபகிருது வருடம் பங்குனிமாதம் 30ம் தேதி 12-04-2024 வெள்ளிக் கிழமை
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, தேவையற்ற விவகாரங்களில் தலையிடதீர்கள்.குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். மனதில் நினைத்தது நினைத்தமாத்திரத்தில்நிறைவேறும்.நம்பியவருக்கு நல்லுதவி செய்ய முடியும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, தெய்வ வழிபாடு சிறப்பாக அமையும். வீண் கோபத்தால் பிரியமானவர்கள் நட்பை இழக்க நேரிடும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு தொழில் வியாபாரங்கள் சிறப்படையும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் எதிர்பாராத செலவு காத்திருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.மருத்துவ விரையங்கள் உண்டாகும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, திட்டமிட்ட காரியம் ஒன்றில் திடீர் மாற்றம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். எதிரிகள் பலம் இழந்து நிற்பர். உத்யோத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் உள்ள சூட்சுமங்கள் தெரிய வரும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்ப நபர்களுடன் அனுசரித்து போகவும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். முன் கோபத்தை தவிர்க்கவும். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். தொழில், வியாபாரம் விறுவிறுப்படையும்.மதியம் 12:15 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்ப பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். விடாமுயற்சியால் எதையும் சாதிக்க முடியும். நட்பால் நன்மை வந்து சேரும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும்.மதியம் 12:15 மணிக்குமேல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அடுத்த இரண்டு தினங்களுக்கு கவனமும் நிதானமும் அவசியம்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்ப கௌரவம் உயரம். மனதில் இருந்த கவலை நீங்கும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் லாபத்தை தரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, வெளிநாடு சென்று வரும் யோகம் உண்டு. நண்பர்களால் சில மனக்கசப்புகள் வந்து நீங்கும். உறவினர்கள் உதவி கேட்டு வருவர். பண விவகாரங்கள் கவனம் தேவை.உத்யோக மாற்றம் ஏற்படும்.தொழில் வியாபாரங்கள் லாபத்தை தரும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, பொருளாதார வசதிகள் பெருகும். உறவினர்களிடையே சுமுக உறவு ஏற்படும். திட்டமிட்ட பயணங்கள் தாமதமாகும். அலைச்சல் அதிகமாகும்.பண விவகாரங்களில் கவனம் தேவை.தொழில், வியாபாரத்தில் ஆர்வம் கூடும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். சில சமயங்களில் மறதி தொல்லை இருக்கும். பண வரவில் சிறிய தடை இருக்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.புதிய தொழில்கள் மூலமாக வருமானம் அதிகரிக்கும்
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். குலதெய்வ வழிபாடு சிறப்பைத்தரும்.பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சமூக அந்தஸ்து உள்ளவர்களின் தொடர்பு கிட்டும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, மன மகிழ்ச்சி உண்டாகும்.காரிய தடைகள் விலகும்.குடும்பம் குதுகலமாக இருக்கும். விலை உயர்ந்த பொருள் சேர்க்கை உண்டாகும். யாரையும் விமர்சிக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
Image credits: Freepik