இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே,உற்சாகமாக காணப்படுவீர்கள். வெளியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தெய்வ பலம் கூடும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்யோகத்தில் கவனம் தேவை.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, உங்கள் செயல் திறன் அதிகரிக்கும்.வெளிவட்டார தொடர்பு விரிவடையும். எதிரிகளின் பலம் பாதியாக குறையும். பிரிந்துசென்ற தம்பதியினர் ஒன்று சேருவர். தொழில், வியாபாரம் விருத்தி பெரும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே,மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கும்.குழப்பம் தீரும். குடும்பத்தில் இழந்த நிம்மதி திரும்ப கிடைக்கும். பழைய சொந்த, பந்தங்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோக மாற்றம் ஏற்படும்
கடகம்
கடக ராசி நண்ர்களே, குடும்பத்திற்கு நன்மையான விஷயங்கள் நடக்கும். மறைமுக எதிரிகள் விலகுவார்கள்.எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். மறைமுக பிரச்சனைகள் நீங்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்பத்திற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் யாருக்கும் வாக்குறுதிகளை வழங்காதீர்கள்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தில் திருப்திகரமான சூழல் நிலவும். திட்டமிட்ட காரியம் கைகூடும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். புது தொழில் யோகம் அமையும்
துலாம்
துலாம் ராசி நண்பர்களே,அலைச்சல் அதிகமாக காணப்படும். குடும்பத்தில் திடீர் மருத்துவ செலவுகள் வரும். ஆன்மீக நாட்டம் கூடும். முன் கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது. உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, எதிர்பாராத பயணங்களால் நல்ல திருப்பம் ஏற்படும். புது பொருள் சேர்க்கை உண்டாகும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, உறவினர்கள் அன்பு தொல்லை அதிகரிக்கும். கையில் எடுத்த காரியம் வெற்றிகரமாக முடியும். பண வரவு இருக்கும். உத்யோகம் தொடர்பான பயணம் ஏற்படும்.தொழில் வியாபாரங்கள் செழிப்படையும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்பத்தில் சுக வாழ்வு ஏற்படும். பெற்றோர்கள் கேட்டதை செய்து தர இயலும். புது நண்பர்களால் சில தொந்தரவுகள் வரும். தொழில், வியாபாரம் சிறக்கும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனக்குழப்பம் காணப்படும் கவனமும் நிதானமும் மிக அவசியம்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, முக்கிய நிகழ்வுகள் நினைவுக்கு வரும். உடல் நலம் சீராகும். கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும்.பகைவர்கள் அடிபணிந்து பணிந்து போவர். தொழில், வியாபாரம் வழக்கம் போல் செல்லும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். பெற்றோர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.தொழில் வியாபாரங்கள் செழிப்படையும்.
Image credits: Freepik






