
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
சோபகிருது வருடம் மாசிமாதம் 30ம் தேதி 13-03-2023 புதன்கிழமை
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, புத்தி கூர்மையால் எதையும் சாதித்து காட்டுவீர்கள்.பிறருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மன ரீதியாக பிரச்சனைகள் தேடி வரும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்ப செல்வாக்கு நாளடைவில் உயரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது நட்பு வட்டாரம் உருவாகும். அலைச்சல் அதிகமாகும் வரவுக்கேற்ற சிலவுகளும் உண்டாகும்.தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, அடுத்தவர் தவறுகளை சுட்டி காட்ட வேண்டாம். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.தொழில் வியாபாரங்கள் லாபத்தை தரும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, உறவினர்கள் வழியில் மனசங்கடம் வரும். முன் கோபத்தை குறைத்து கொள்ளவும்.யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பபர்களே, புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளிவட்டாரத்தில் வீண் விவாதங்களை தவிர்க்கவும். எதிர்ப்புகள் தானாக அடங்கும். உத்யோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும். சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமும் நிதானமும் மிக அவசியம்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, பெற்றோர்கள் ஆலோசனை கைகொடுக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டும்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உணவு விஷயத்தில் கவனம் தேவை.திருமணத்தில் இருந்த தடை நீங்கும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தில் பழைய அமைதி மீண்டும் திரும்பும். மனக்கவலைகள் மறையும்.கொடுத்த பணம் வசூல் ஆகும் கடன்கள் சிறுக சிறுக அடைபடும். நண்பர்களால் தேவையில்லாத பிரச்சனைகள் வரும். தொழில், வியபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்ப பெரியோர்களின் அறிவுரை கிட்டும். கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும்.நினைத்த காரியம் நிறைவேறும்.தெய்வ காரியங்களில் நாட்டம் கூடும். எதிரிகள் விலகியே நிற்பார். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். புது சொந்தங்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் உங்கள் புகழ் ஓங்கும்.தொழில் வியாபாரத்தில் புதிய முதலீடுகளால் கணிசமான லாபத்தை காணலாம்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். தேவையற்ற குழப்பம் மனதில் இனம்புரியாத பயம் ஏற்படும். பிரியமானவர்களின் நலனில் அக்கறைகொள்ளவும்.அரணைத்து செல்லவும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.தொழில் வியாபாரங்கள் சிறப்படையும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, தைரியம் பிறக்கும்.பொதுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். உத்யோகத்தில் நற்பெயர் கிடைக்கும்.தொழில், வியாபாரம் சிறக்கும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, சமூக அந்தஸ்து உள்ளவர்களின் தொடர்பு கிட்டும். அவர்களால் உதவிகளும் கிடைக்கும்.தான தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நேர்மறை எண்ணங்கள் வந்து போகும்.யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
Image credits: Freepik