
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்
குரோதி வருடம் வைகாசி மாதம் 1, 14.05.2024 சனிக்கிழமை
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே,மனதில் புது உத்வேகம் பிறக்கும் காரிய தடைகள் விலகும். சுற்றுவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். சேமிப்பில் கவனம் தேவை. உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்பத்தில் சகஜ நிலை உண்டாகும். அன்பால் எதையும் சாதிப்பீர்கள். பொருளாதாரம் ஏற்ற இறக்கமாக இருக்கும் கடன் வாங்குவதை தவிற்க்கவும். உடல் நலம் சீராகும் உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். முன் கோபம் அதிகமாக காணப்படும்.எதிர்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். காரிய தடை விலகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, சுய முயற்ச்சியால் நன்மைகள் உண்டாகும்.அந்நிய நபர்களின் நட்பு கிடைக்கும். பிரியமானவர்கள் வழியில் தேவையற்ற சிரமங்கள் உருவாகும். வாழ்க்கைதுணையால் நன்மை உண்டு. உத்யோக மாற்றம் ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்க பேச்சுவார்த்தைகள் உண்டாகும் ஆன்மிகத்தில் ஈடுபாடு உண்டாகும்.கோவில் தலங்களுக்கு சென்று வருவீர்கள். பொது பிரச்சனையில் தலையிட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே,பண வரவு நன்றாக இருக்கும் பழைய பிரச்சனை ஒன்று முடிவுக்கு வரும். குடும்பத்தில் அனுசரணை அதிகம் தேவை. பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்ப நிதி நிலைமை சீரடையும். திட்டமிட்ட காரியத்தை சிறப்பாக செய்ய முடியும். நெருக்கமானவர்களின் ஆதரவு கிட்டும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமும் நிதானமும் மிக அவசியம்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே,மனதிற்கினிய நற் செய்தி ஒன்று கிடைக்கும்.நண்பர்களுடன் சுற்றுலா பயணம் செய்ய திட்டமிடுவீர்கள். முக்கிய வேலைகள் தாமதமின்றி முடிவடையும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட நேரிடும். முன் கோபத்தை குறைத்துக்கொள்ளவும். கணவன் மனைவிக்குள் மன ஸ்தாபங்கள் வரக்கூடும்.கடன் சுமை இருக்கும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, பண சேமிப்பில் ஆர்வம் பிறக்கும் கடன் சுமைகள் சிறுக சிறுக குறையும்.கொடுத்த பணம் வசூல் ஆகும்.
முக்கிய நபர்களின் சந்திப்பு நிகழும். நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து போகவும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். திருமண காரியம் கைகூடும்.ஆடம்பர சிலவுகள் தவிற்பது நல்லது.பண விவகாரங்களில் கவனம்.தேவை. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, குடும்ப உறவுகள் நல்லவிதமாக இருக்கும்.கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும்.சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். எதிலும் பொறுமையாக இருந்து சாதிக்கவும். பண வரவு தாமதமாகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.
Image credit: Freepik