
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிவரும். தள்ளி போன காரியங்கள் விரைவில் முடிக்க முடியும். கணவன் மனைவி உறவு பலப்படும்.அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் கவனம் தேவை.
ரிஷபம்.
ரிஷப ராசி நண்பர்களே, குடும்ப பெருமையை உயர்த்த முடியும். பண தேவைகள் பூர்த்தியாகும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் இருக்கும். உறவினர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்ப செலவுகள் அதிகரிக்க தொடங்கும். மனபலம் கூடும். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். கணவன் மனைவிக்குள் ஈகோ தலைதூக்கும் ஒருவருக்குள் ஒருவர் விடடுக்கொடுத்து போவது நலம்.தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, வேண்டியவர்களை அனுசரித்து போவது நல்லது. உணவு கட்டுப்பாடு அவசியம். எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் யாருக்கும் வாக்குறுதிகளை வழங்க வேண்டாம்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். விலகி நின்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவார்கள். பண வரவு சிறிது தடைப்படும்.வீண் செலவுகள் உண்டாகும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. யாருக்கும் ஜாமீன் கையெழுத்துக்கள் போட வேண்டாம். இதுவரை இருந்து வந்த மனக்கவலைகள் மறையும். கணவன் மனைவிக்கிடையே வீண் வாக்குவாதம் வரலாம். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்ப விஷயங்களில் அலட்சியம் வேண்டாம். முக்கிய வேலைகளை போராடி முடிக்க வேண்டிவரும். கடன் பிரச்னை ஓரளவு குறையும்.ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும் உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, பிரியமானவர்களால் சில தொந்தரவுகள் வரும். சற்றும் எதிர்பாராத வகையில் தன வரவு உண்டு. தேவைகள் பூர்த்தியாகும். விமர்சனங்களை கண்டு கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். விரும்பிய பொருட்களை வாங்க முடியும். சொத்து விவகாரத்தில் இழுபறி நிலை நீடிக்கும். உத்தியோக மாற்றம் ஏற்படும். இன்றும் சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.
மகரம்
மகர ராசி நண்பர்களே, மன அமைதி கிடைக்கும்.குடும்ப எதிர்பார்ப்புகள் அதிகமாகும். பிரார்த்தனைகள் நிறைவேறும். விருந்து, விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே,புதிய நபர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். பொருளாதார ரீதியாக சில சிக்கல்கள் வரும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் இருந்த தடை நீங்கும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, குடும்ப நலனில் அக்கறை கொள்ள வேண்டும். குடும்ப நபர்களிடம் விட்டு கொடுத்து போவது நல்லது.நண்பர்கள் கேட்ட உதவியை செய்து தர இயலும். ஆன்மிக ஆர்வம் கூடும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
Image credits: Freepik

ஜோதிடம் தொழிலாக தொடங்கி 11 வருடங்கள் ஆகின்றது
20 வருடங்களாக ஜோதிட ஆராய்ச்சி செய்து வருகிறேன்.
அஸ்ட்ரோ
வெ.பழனியப்பன்
ஜோதிஷ ஆச்சார்யா
கோபிசெட்டிபாளையம்.
9942162388