
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, சோர்வு நீங்கும் புதுப்பொலிவுடன் காணப்படுவீர்கள் உங்கள் அனுபவ அறிவு வெளிப்படும். புது நண்பர்களை அனுசரித்து செல்லவும். விசேஷங்களில் கலந்து கொள்ள முடியும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் குறையும். விலகிச் சென்ற நபர்கள் விரும்பி வந்து பேசுவர். வீட்டு பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை நீங்கும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, தியானத்தால் மனம் நிம்மதியடையும். எதிர்பார்ப்புக்கு தகுந்தாற்போல ஒருவர் அறிமுகமாவர்.காரிய தடைகள் விலகும். திருமண காரியம் கைகூடும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்ப நபர்களிடம் சுமூக உறவு ஏற்படும். நல்லவர்களின் நட்பு நன்மையை தரும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை மாறும். உத்யோகத்தில் பொறுப்புகள் தேடி வரும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வெளி உணவுகளை அறவே தவிர்க்கவும். உடல் அசதி உண்டாகும். பயணங்கள் தள்ளி போகும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே,பண தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புது நட்பால் ஆதாயம் உண்டு. முக்கிய நபர்களின் சந்திப்பு நிகழும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்பம் முன்னேற்ற பாதையை நோக்கி செல்லும். பிரியமானவர்களிடம் விட்டு கொடுத்து போகவும். டென்ஷன், கோபத்தை குறைப்பது நல்லது. தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் உண்டாகும் யாருக்கும் வாக்குறுதிகளை வழங்க வேண்டாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, எதிர்பாலித்தினரால் நன்மை உண்டாகும். முக்கிய நபர்களை சந்திப்பீர்கள்.பயணத்தால் மகிழ்ச்சி ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்ப சுமை அதிகரிக்கும். பொது இடங்களில் வார்த்தைகளை அளந்து பேசவும். முன் கோபத்தை தவிற்காகவும்.அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே,வரவுக்கேற்ப சிலவுகளும் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை. விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். உடல் நலம் சீராகும். தொழில், வியாபாரம் செழிப்படையும்
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்ப ரகசியங்களை பாதுகாக்கவும். வாழ்வில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். பண வரவால் பழைய சிக்கலை தீர்க்க முடியும். காரிய தடைகள் அகலும்.தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடக்கும். பொது வாழ்வில் மதிப்பு கூடும். ஆன்மீக எண்ணம் மேலோங்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமும் நிதானமும் மிக அவசியம்.