
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
சோபகிருது வருஷம் பங்குனி மாதம் 3ம் தேதி 16-03-2024 சனிக்கிழமை.
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே,உறவினர்களிடமிருந்து உதவிகள் கிடைக்கும். பண தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தின் நன்மதிப்பை பெற முடியும். நல்ல செய்தி ஒன்று காதில் வந்து விழும். விலகி நின்றவர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.தொழில் வியாபாரங்கள் வளத்தை தரும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, குடும்பத்தில் சந்தோஷம் நிறைந்து இருக்கும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும்.ஆன்மீக எண்ணம் மேலோங்கும். அன்றாட தேவைகள் நிறைவேற வழி பிறக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் யாருக்கும் வாக்குறுதிகளை வழங்காதீர்கள்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் குதுகலம் ஏற்படும்.மன மகிழ்ச்சி உண்டாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். வீடு, வாகனத்தை சீர் செய்ய வேண்டிவரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும். புதிய முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும்.வியாபார விஷயமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள் மனமும், உடலும் புத்துணர்வுடன் செயல்படும். பெற்றோர்கள் பக்கபலமாக இருப்பர். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். கவனக்குறைவால் விரையங்கள் ஏற்படும்.தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்பத்தில் இருந்த சண்டை, சச்சரவுகள் நீங்கும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.காரிய தடை விலகும்.எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ள முடியும். புது நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தில் ஆடம்பர செலவு ஏற்படும். வாழ்க்கையில் தரத்தில் சில மாறுதல்கள் ஏற்படும். விரக்தி மனப்பான்மை நீங்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமும் நிதானமும் அவசியம் அவசர முடிவுகளை தவிற்க்கவும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, அக்கம் பக்கம் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். குலதெய்வ வழிபாடு நன்மையை தரும். பிரியமானவர்கள் ஓத்தாசையாக இருப்பர். உத்யோக மாற்றம் ஏற்படும்.தொழில் வியாபாரத்தில் மந்தநிலை காணப்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்ப விவகாரங்களில் கவனம் செலுத்தவும். மறைமுக விமர்சனங்கள் வந்து போகும்.பணவரவு நன்றாக இருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பாராட்டுக்களும் பதவிகளும் கிடைக்கும் தொழில், வியாபாரம் சிறக்கும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, மனதில் எப்போதும் இல்லாத மகிழ்ச்சி ஏற்படும். தொல்லை தந்தவர்கள் விலகி நிற்பர். வீண் விவாதங்களை அறவே தவிர்க்கவும். யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள்.உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.தொழில் வியாபாரத்தில் லாபம் காணலாம்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனமாக பழகவும். ஜாமீன் கையெழுத்துக்கள்தவிர்க்கவும். உறவினர்கள் சில உதவி கேட்டு வருவர். நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உதயோகத்தில் பாராட்டு கிடைக்கும்.தொழில் வியாபாரத்தில் மிதமான சூழல் நிலவும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, சாதுரியமான பேச்சால் எதையும் சாதிக்க முடியும். நிலுவை பணிகளை நிறைவு செய்வீர்கள் நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். பண விவகாரங்களில் கவனம் தேவை.திட்டமிட்டபடி பயணம் செய்ய முடியும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, மனம் மகிழ்ச்சி அடையும்.குடும்ப பெருமையை வெளியில் சொல்லி மகிழ முடியும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். முக்கிய காரியங்கள் நிறைவேறும். உத்யோத்தில் அமைதி நிலவும்.
தொழில் வியாபாரங்கள் செழிப்படையும்.
Image credits: Freepik