ஆன்மிகம்ராசிபலன்

இன்றைய ராசிபலன் 17 ஏப்ரல் புதன் கிழமை

இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்

குரோதி வருடம் சித்திரை 04 17.04.2024 புதன்கிழமை
மேஷம்

மேஷ ராசி நண்பர்களே,ஞாபக மறதி அதிகமாக காணப்படும். இறைவழிபாட்டில் கவனம் செலுத்தவும். திடீர் பண வரவுகள் உண்டாகும்.காரிய அனுகூலம் உண்டாகும். இல்லத்தில் உங்கள் பேச்சுக்கு எதிர் பேச்சு இருக்காது. உத்யோகத்தில் அமைதி நிலவும்.

ரிஷபம்

ரிஷப ராசி நண்பர்களே, நெருக்கமானவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். உறவினார்களால் உதவிகள் கிடைக்கும் நண்பர்களால் வீண் டென்ஷன் வந்துப் போகும். திட்டமிடாத செலவுகள் வரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே, அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உறவினர்களிடம் சின்ன மனவருத்தம் வரும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.பண விவகாரங்களில் கவனம் தேவை. தேவையின்றி கடன் வாங்குவதை தவிர்க்கவும்.உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

கடகம்

கடக ராசி நண்பர்களே, குடும்ப பொருளாதாரம் ஏறு முகமாக இருக்கும். வாக்கு சாமர்த்தியம் உண்டாகும். வீடு மாற வேண்டிய சூழல் வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.இன்றும் ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் மனக்குழப்பம் காணப்படும் யாருக்கும் வாக்கறுதிகளை வழங்க வேண்டாம்.

சிம்மம்

சிம்ம ராசி நண்பர்களே, கொடுத்த வாக்கினைக் காப்பாற்ற சிரமப்பட வேண்டியிருக்கும்.கணவன் மனைவிக்குள் ஈகோ பிரச்சனை இருக்கும். நட்பு வட்டாரங்களை குறைக்கவும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.தொழில் வியாபாரங்கள் லாபத்தை தரும் .

கன்னி

கன்னி ராசி நண்பர்களே, யாரையும் அதிகம் நம்பாமல் இருப்பது நல்லது. அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். ஜாமீன் கையெழுத்துக்கள் தவிற்க்கவும்.பயணங்களால் களைப்பு இருக்கும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

துலாம்

துலாம் ராசி நண்பர்களே,மன மகிழ்ச்சி காணப்படும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். குடும்பத்தில் சுமுகமான சூழல் நிலவும். நேர்முக மறைமுக எதிர்ப்புகள் தானாக விலகும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பத்தில் இக்கட்டான சூழல் நிலவும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீண் கோபத்தை குறைப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமும் நிதானமும் அவசியம். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாதீர்கள்.

தனுசு

தனுசு ராசி நண்பர்களே, கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்கவும். அண்டை, அயலாருடன் நட்புறவு ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள் மருத்துவ சிலவுகள் கட்டுக்குள் வரும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் கூடும்.

மகரம்

மகர ராசி நண்பர்களே, பல நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.தனாவருவாய் நன்றாக இருக்கும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெற முடியும். பெண்கள் வகையில் சில தொந்தரவுகள் வரும்.வெளி நபர்களிடம் உஷாராக பழகுங்கள். உத்யோக மாற்றம் ஏற்படும்.தொழில் வியாபாரங்கள் மிதமான லாபத்தை தரும்.

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே, மற்றவர்களுக்குகாக சில பொறுப்புகளை ஏற்க வேண்டிவரும். நிலுவை பணிகளை நிறைவு செய்வீர்கள்.மேல் அதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். உடல் நலம் மேம்படும். புது தொழில், யோகம் அமையும்.

மீனம்

மீன ராசி நண்பர்களே, குடும்பத்தில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. மன சுமை அதிகரிக்கும். ஆடம்பர சிலவுகளால் கையிருப்புகள் கரையும்.சகோதரர்களிடம் விட்டுக்கொடுத்து போவது நல்லது பெரியோர்கள் ஆசி கிட்டும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

Image credits: Freepik

What's your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0

You may also like

ஆன்மிகம்

கண்ணனின் 108 போற்றி I கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்

இன்று கிருஷ்ண ஜெயந்தி.யசோதையின் செல்லப் பிள்ளையாய் அனைவரின் மனதைக் கொள்ளைக் கொண்டவன். வாசுதேவன் அவதரித்த நாள். சிறுவயது முதலே அனைவரின் ...
1008 முருகன் போற்றிகள்
ஆன்மிகம்

கந்தனுக்கு உகந்த கந்தர் கலிவெண்பா பாடல் வரிகள்

கந்தன்..முருகன்.. என்றாலே அடுத்து நினைவுக்கு வருவது அருணகிரிநாதர். 51 விருத்தப்பாக்களால் ஆன கந்தர் அனுபூதி என்பது கந்தனுக்கு உரிய பாடல்களில் ...
இன்றைய ராசி பலன்
ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 04 செவ்வாய்க் கிழமை

பொது ராசிபலன்கள் என்பது பொதுவான பலன்கள் ஆகும். பொது ராசிபலன்கள் என்பது சந்திரனை மையமாக வைத்து சொல்லக்கூடிய பலன்கள். இவை ...

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

clock on the table with sun and tree ஆன்மிகம்

இன்றைய பஞ்சாங்கம் 04 பிப்ரவரி செவ்வாய் கிழமை

பஞ்சாங்கம் படிப்பதால் உங்களுக்கு தினமும் கிடைக்கும் நன்மைகள் வாரத்தை ( நாள்) சொல்லுவதால் ஆயுள் வளரும். திதியை கூறுவதால் ஐஸ்வரியம் ...
hindu marriage ஆன்மிகம்

பிப்ரவரி 2025 முக்கிய விரத தினங்கள்.. சுபமுகூர்த்த நாட்கள்.. முழு விவரம் இதோ!

பிப்ரவரி 2025: தைத்திருநாளுக்கு பிறகு  திருமண வைபவங்கள் அதிகமாக நடைபெறும் மாதம் இந்த பிப்ரவரி மாதம். தை மாசி இணையும் ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் பிப்ரவரி 01 சனிக்கிழமை

பொது ராசிபலன்கள் என்பது பொதுவான பலன்கள் ஆகும். பொது ராசிபலன்கள் என்பது சந்திரனை மையமாக வைத்து சொல்லக்கூடிய பலன்கள். இவை ...
இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

இன்றைய ராசிபலன் 31 ஜனவரி 2025 வெள்ளிக்கிழமை

மேஷம் இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். குடும்பத்தினருடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து ஒற்றுமை நிலவும். ...