
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே,கணவன் மனைவிக்குள் வாக்கு வாதங்கள் உருவாகும் குடும்பத்தில் ஏற்றமான சூழ்நிலை உருவாகும். தடைகளை தகர்த்தெறிய முடியும். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, உறவினர்களுடன் நல்லுறவு ஏற்படும். மனம் தெளிவு பெரும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வரும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்
கடகம்
கடக ராசி நண்பர்களே, பெரியோர்களின் அறிவுரைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். குலதெய்வ வழிபாடு சிறக்கும். திருமணம் காரியம் கைகூடும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் யாருக்கும் வாக்குறுதிகளை வழங்க வேண்டாம்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்ப உறவுகள் பலப்படும். விலை மதிப்புள்ள பொருட்களை கவனமாக கையாளவும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தில் ஆரவாரம் நிறைந்து காணப்படும். சுற்றி இருப்பவர்களை அனுசரித்துப் செல்லவும். கடன் தொந்தரவு இருக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்ப செலவினங்கள் அதிகரிக்கும். பல வேலைகளையும் ஒரே நேரத்தில் சேர்த்து பார்க்க வேண்டி வரும். காரிய தடை விலகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, மாறுபட்ட அணுகுமுறை காரிய வெற்றிக்கு உதவும். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசவும். விலகி நின்றவர்கள் விரும்பி வந்து இணைவர். உத்யோக மாற்றம் ஏற்படும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்ப ஒற்றுமை மேலோங்கும். இனம் தெரியாத ஒரு சில கவலைகள் வந்து போகும். சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. தொழில், வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற இயலும். பொருள் சேர்க்கை உண்டாகும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். உத்யோகத்தில் வாய்ப்புகள் தேடி வரும்.
மீனம்
மீன ராசி நண்ர்களே, முன் கோபம் அதிகமாக காணப்படும். பிடிவாதத்தால் பலரின் நட்பை இழக்க நேரிடும். பெற்றோர்களிடம் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும்.

ஜோதிடம் தொழிலாக தொடங்கி 11 வருடங்கள் ஆகின்றது
20 வருடங்களாக ஜோதிட ஆராய்ச்சி செய்து வருகிறேன்.
அஸ்ட்ரோ
வெ.பழனியப்பன்
ஜோதிஷ ஆச்சார்யா
கோபிசெட்டிபாளையம்.
9942162388