
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, சவால்கள், விவாதங்களில் வெற்றி கிடைக்கும். வாக்கு சாமர்த்தியம் உண்டாகும். சிநேகிதம் வழியில் நல்ல தகவல் வரும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.தொழில் வியாபாரம் லாபத்தை தரும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனம் தேவை.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, இஷ்ட தெய்வ வழிபாடு நன்மையை தரும். பிரியமானவர்கள் ஒத்தாசையாக இருப்பர். எதிர்பார்த்தவிஷயங்கள் தாமதமாகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, மனதிற்கு இதமான செய்தி ஒன்று வரும். பண தட்டுப்பாடு நீங்கும்.சொந்த பந்தங்களால் நன்மைகள் உண்டு. எதிர்பார்த்த விஷயங்கள் தாமதமாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, எதிர்பார்ப்புகள் அதிகமாகும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். முன் கோபத்தை குறைக்கவும். புதியவர்களை அதிகம் நம்பாமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, எதிலும் அவசரம் இல்லாமல் செயல்படவும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். உத்யோகக்தில் கவனம் தேவை.தொழில் வியாபாரத்தில் புதிய முதலீடுகளை தவிர்க்கவும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். பண விரையங்கள் உண்டாகும்.வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். வாகன பராமரிப்பு செலவு கூடும். உத்யோகத்தில் பணிச்சுமை அதிகமாகும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, ஆன்மீக எண்ணம் மேலோங்கும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிவரும். திட்டமிடாத மருத்துவ செலவுகள் வரும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.தொழில் வியாபாரங்கள் செழிப்படையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போகவும். ஒரே நேரத்தில் பல வேலைகளை பார்க்க வேண்டி வரும். பொருள் சேர்க்கை உண்டாகும். உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும் யாருக்கும் வாக்குறுதிகளை வழங்காதீர்கள்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, பயணங்களால் அலைச்சல் இருக்கும். நண்பர்கள் உதவி கேட்டு வருவர். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிக்க முடியும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.தொழில் வியாபரங்கள் லாபத்தைத் தரும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்பத்தினர் நல்ல ஒத்துழைப்பை தருவர். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோக மாற்றம் ஏற்படும்.தொழில் வியாபாரங்கள் செழிப்படையும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பம் நீங்கும். உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். உடல் உபாதைகள் வரக்கூடும் பெற்றோர்கள் ஆலோசனை வழங்குவர். புது தொழில் யோகம் அமையும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, எதிரிகளை வெல்லும் ஆற்றல் உண்டாகும்.ஆடம்பர சிலவுகளை குறைத்து சிக்கனமாக செலவழித்து சேமிக்க பழகவும். உறவினர்கள் வழியில் சில சங்கடங்கள் வரும் யாரையும் பகைத்து கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.
தொழில் வியாபாரத்தில் மிதமான சூழல் நிலவும்.