
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, யாருடைய விமர்சனத்திற்கு செவி சாய்க்க வேண்டாம். காரிய அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவிடையே பனிப்போர் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச்சுமை இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, மனதில் ஆன்மீக சிந்தனைகள் உதிக்கும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும்
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்ப சுமை அதிகமாகும். திட்டமிட்ட காரியத்தில் திடீர் மாற்றம் ஏற்படும். வாகன பராமரிப்பு செலவுகள் கூடும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, குடும்ப நலனில் கவனம் தேவை. அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, குடும்பத்திற்கு தேவையானது கிடைக்கும். நட்பால் நன்மை வந்து சேரும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரிய வரும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, பெரியோர்களின் அறிவுரை, ஆசி கிட்டும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, எதிலும் யோசித்து செயல்படுவது நல்லது. விலகி சென்ற நபர்கள் விரும்பி வந்து இணைவர். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.மதியம் 2 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, பெற்றோர்கள் விருப்பங்களை பூர்த்தி செய்ய முடியும். மன பாரம் குறையும். கணவன் மனைவிக்குள் நல்ல அனுசரணை இருக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.மதியம் 2 மணிக்கு ராசிக்கு சந்திராஷ்டமம் தொடங்குகிறது.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். எதிர்மறை எண்ணங்களை மனதில் இருந்து நீக்கவும். ஆன்மீகத்தில் ஆர்வம் கூடும். தொழில், வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும் .
மகரம்
மகர ராசி நண்பர்களே, பயணங்கள் நல்ல படியாக அமையும். உடலுக்கு ஏற்ற உணவு வகைகளை உட்கொள்ளவும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். புது தொழில் யோகம் அமையும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். சமூக அந்தஸ்து உயரும். சொந்த விஷயங்களை வெளியில் பகிர கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் பொறுமை அவசியம்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, மனதில் நினைத்தது நிறைவேறும். அண்டை, அயலாரிடம் நட்புறவு ஏற்படும். உறவினர்கள் உதவி கேட்டு தொந்தரவு செய்வர். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிக்க முடியும்.
Image credits: Freepik