
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நம்மை யாரும் புரிந்து கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் இருக்கும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.தொழில் வியாபாரங்கள் லாபத்தை தரும்.
ரிஷபம்.
ரிஷப ராசி நண்பர்களே, குடும்ப தேவைகள் அதிகரிக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும்.கடன் வாங்குவதை தவிற்க்கவும் உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.தொழில் வியாபாரங்கள் மிதமாக இருக்கும்.
மிதுனம்.
மிதுன ராசி நண்ர்களே, புரியாத விஷயங்கள் கூட எளிதில் புரியும். உறவினர்களிடமிருந்து உதவி கிடைக்கும். உடல் நலம் சீராகும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமும் நிதானமும் மிக அவசியம்.
கடகம்.
கடக ராசி நண்பர்களே, அடுத்தவர் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். மனதில் ஒருவித தயக்கம் வந்துச் செல்லும். நண்பர்களிடம் எச்சிரிக்கையாக பழகுங்கள். எதிரிகளின் பலம், பலவீனம் அறிந்து செயல்படவும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்ர்களே, குடும்ப பெருமையை உயர்த்த முடியும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். கடன் நெருக்கடி இருக்கும். தொழில், வியாபாரத்தில் உங்கள் கை ஓங்கும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தில் புது திட்டங்கள் நிறைவேறும். காரிய தடை விலகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பெரிய மனிதர்களின் சந்திப்பு நிகழும் அவர்களால் உதவிகளும் கிடைக்கும்.தொழில், வியாபாரம் சீரான பாதையில் செல்லும்.
துலாம்.
துலாம் ராசி நண்பர்களே, விலகிச் சென்ற நபர்கள் வலிய வந்துப் பேசுவர். கணவன் மனைவி உறவு பலப்படும்.நண்பர்கள் வழியில் பண விரையம் வரும். விரும்பிய பொருட்களை வாங்க முடியும். உத்யோக மாற்றம் ஏற்படும்.தொழில் வியாபாரங்கள் செழிப்பைத்தரும்.
விருச்சிகம்.
விருச்சிக ராசி நண்பர்களே, வெளிவட்டாரத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். மனதில் நேர்மறை எண்ணங்கள் வந்து போகும். வரவேண்டிய பணம் தாமதமாகும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.
தனுசு.
தனுசு ராசி நண்பர்களே,காரிய தடைகள் விலகும். குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலை நிலவும். முக்கிய வேலைகள் முடிவடையும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
மகரம்.
மகர ராசி நண்ர்களே, குடும்ப நபர்களிடம் வாக்கு வாதம் செய்ய வேண்டாம். மன தைரியம் கூடும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உத்யோகத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும் யாருக்கும் வாக்குறுதிகளை வழங்க வேண்டாம்.
கும்பம்.
கும்ப ராசி நண்ர்களே, எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும்.நண்பர்களின் உதவிகள் கிடைக்கும் பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். பண தேவைகள் பூர்த்தியாகும்.வழக்கில் தீர்ப்பு வரும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
மீனம்.
மீன ராசி நண்பர்களே, குடும்ப அந்தஸ்து உயரும். கேட்ட இடத்தில் பணம் உதவி கிடைக்கும்.நினைத்த காரியம் நிறைவேறும் .பண விவகாரங்களில் எச்சரிக்கை தேவை.யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். உத்யோகத்தில் பாராட்டு மழை உண்டு.
Image credits: Freepik