ஆன்மிகம்ராசிபலன்

இன்றைய ராசிபலன் 20 ஜனவரி திங்கள் கிழமை

இன்றைய ராசி பலன்

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே, பிரியமானவர்களிடம் அனுசரித்து போகவும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். முடியாத வேலைகளை செய்ய வேண்டாம். காரிய தடை விலகும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும்.தொழில் வியாபாரத்தில் மந்தநிலை காணப்படும்.

ரிஷபம்

ரிஷப ராசி நண்பர்களே, குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். வரவு, செலவு கணக்கில் கவனமாக இருக்கவும்.முடிந்த அளவு கடன் வாங்குவதை தவிற்க்கவும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே, மனக் கவலை அகலும். சாதுர்யமான பேச்சு காரிய வெற்றிக்கு உதவும். கணவன் மனைவிக்குள் இருந்த பகைமை நீங்கும். உத்யோகத்தில் அலைச்சல் ஏற்படும்  மனக்குழப்பம் அதிகமாக காணப்படும் யாருக்கும் வாக்குறுதிகளை வழங்காதீர்கள்.

கடகம்

கடக ராசி நண்பர்களே, தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவர். பண தேவைகள் பூர்த்தியாகும்.கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசி நண்பர்களே, குடும்பத்தில் மனநிம்மதி ஏற்படும். புதிய கோணத்தில் சிந்தித்து செயல்பட முடியும்.காரிய தடைகள் விலகும் நினைத்த காரியம் கைகூடும். உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசி நண்பர்களே,மனநிறைவும் சந்தோஷமும் உண்டாகும்.சோம்பல் விலகும். சுற்றத்தாரின் ஆதரவு பெருகும். உறவினர்களுடன் சுமுக உறவு ஏற்படும். திருமண காரியம் கைகூடும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

துலாம்

துலாம் ராசி நண்பர்களே, திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். வீண் சண்டை, சச்சரவுகளை தவிர்க்கவும். மருத்துவ செலவுகள் வரும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களே, புதிய முயற்சிகளில் ஈடுபாடு உண்டாகும். வெளியில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.உடல் நலனில் அக்கறை கொள்ளவும். நல்லதையும் கெட்டதையும் சமமாக பாவித்துக்கொள்ளவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.தொழில் வியாபாரங்கள் லாபத்தை தரும்.

தனுசு

தனுசு ராசி நண்பர்களே, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். அடிக்கடி மறதி தொல்லை வரும்.பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரங்களில் கவனம் தேவை.யாரையும் முழுமையாக நம்பி விடாதீர்கள். நல்ல தகவல் வந்து காதில் விழும். தொழில், வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும்.

மகரம்

மகர ராசி நண்பர்களே, குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும். கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்கும். பிரியமானவர்களின் நேசத்தைப் பெற முடியும். கொடுக்கல், வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே, குடும்பத்தில் குழப்பான சூழல் காணப்படும். யாரிடமும் கோபத்தை காட்டாதீர்கள்.உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். பயணங்கள் அனுகூலமான திருப்பங்களை தரும். உத்யோகத்தில் நற் பெயர் கிடைக்கும்.தொழில், வியாபாரம் செழிப்படையும். சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை.

மீனம்

மீன ராசி நண்பர்களே, பொது காரியங்களில் ஈடுபாடு வரும்.அரசியல் செல்வாக்கு கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.மனதில் ஏற்பட்ட குழப்ப நிலை நீங்கும். பண தேவைகள் பூர்த்தியாகும் .வாகன பயணங்களில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் சிறக்கும்.

 

What's your reaction?

Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly
0
பழனியப்பன்
ஜோதிடம் தொழிலாக தொடங்கி 11 வருடங்கள் ஆகின்றது 20 வருடங்களாக ஜோதிட ஆராய்ச்சி செய்து வருகிறேன். அஸ்ட்ரோ வெ.பழனியப்பன் ஜோதிஷ ஆச்சார்யா கோபிசெட்டிபாளையம். 9942162388

    You may also like

    ஆன்மிகம்

    கண்ணனின் 108 போற்றி I கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்

    இன்று கிருஷ்ண ஜெயந்தி.யசோதையின் செல்லப் பிள்ளையாய் அனைவரின் மனதைக் கொள்ளைக் கொண்டவன். வாசுதேவன் அவதரித்த நாள். சிறுவயது முதலே அனைவரின் ...
    1008 முருகன் போற்றிகள்
    ஆன்மிகம்

    கந்தனுக்கு உகந்த கந்தர் கலிவெண்பா பாடல் வரிகள்

    கந்தன்..முருகன்.. என்றாலே அடுத்து நினைவுக்கு வருவது அருணகிரிநாதர். 51 விருத்தப்பாக்களால் ஆன கந்தர் அனுபூதி என்பது கந்தனுக்கு உரிய பாடல்களில் ...
    இன்றைய ராசி பலன்
    ஆன்மிகம்

    இன்றைய ராசிபலன் பிப்ரவரி 04 செவ்வாய்க் கிழமை

    பொது ராசிபலன்கள் என்பது பொதுவான பலன்கள் ஆகும். பொது ராசிபலன்கள் என்பது சந்திரனை மையமாக வைத்து சொல்லக்கூடிய பலன்கள். இவை ...

    Leave a reply

    Your email address will not be published. Required fields are marked *

    clock on the table with sun and tree ஆன்மிகம்

    இன்றைய பஞ்சாங்கம் 04 பிப்ரவரி செவ்வாய் கிழமை

    பஞ்சாங்கம் படிப்பதால் உங்களுக்கு தினமும் கிடைக்கும் நன்மைகள் வாரத்தை ( நாள்) சொல்லுவதால் ஆயுள் வளரும். திதியை கூறுவதால் ஐஸ்வரியம் ...
    hindu marriage ஆன்மிகம்

    பிப்ரவரி 2025 முக்கிய விரத தினங்கள்.. சுபமுகூர்த்த நாட்கள்.. முழு விவரம் இதோ!

    பிப்ரவரி 2025: தைத்திருநாளுக்கு பிறகு  திருமண வைபவங்கள் அதிகமாக நடைபெறும் மாதம் இந்த பிப்ரவரி மாதம். தை மாசி இணையும் ...
    இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

    இன்றைய ராசிபலன் பிப்ரவரி 01 சனிக்கிழமை

    பொது ராசிபலன்கள் என்பது பொதுவான பலன்கள் ஆகும். பொது ராசிபலன்கள் என்பது சந்திரனை மையமாக வைத்து சொல்லக்கூடிய பலன்கள். இவை ...
    இன்றைய ராசி பலன் ஆன்மிகம்

    இன்றைய ராசிபலன் 31 ஜனவரி 2025 வெள்ளிக்கிழமை

    மேஷம் இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியில் முடியும். குடும்பத்தினருடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து ஒற்றுமை நிலவும். ...