
இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே, குடும்பத்தில் வரவை விட செலவுகள் அதிகமாகும். பயணங்களால் சோர்வு ஏற்படும். கணவன் மனைவிக்குள் இருந்த மனவருத்தம் நீங்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, தெய்வ வழிபாடு சிறப்பான பலனை தரும். பெற்றோர்கள் அன்பும், ஆசியும் கிட்டும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே, குடும்ப பணிகளை கவனிக்க வேண்டிவரும். யாருடனும் வம்பு, வழக்கு வேண்டாம். நல்ல மனிதர்களின் அறிமுகம் சந்தோஷத்தை தரும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
கடகம்
கடக ராசி நண்பர்களே, எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பர். வீட்டு பராமரிப்பு செலவுகள் கூடும். உத்யோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, எதிர்ப்புகளை சமாளிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பண வரவில் சிக்கல் இருக்கும். வழக்கு விஷயங்களில் கவனமாக இருக்கவும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சி கூட ஆரம்பிக்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் குறையும். வெளி உணவுகளை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.சந்திராஷ்டமம் நீடிக்கிறது.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்ப சூழல் சாதகமாக அமையும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். கடன் தொந்தரவு பெரியளவில் இருக்காது. தொழில், வியாபாரம் வளர்ச்சி பெறும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சினைகள் வந்து போகும். புதிய நட்பால் உற்சாகம் ஏற்படும். சொத்துகளிலிருந்து வில்லங்கம் அகலும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, குடும்பத்தில் அமைதி நிலவும். மறைமுக எதிர்ப்புகள் தானாக விலகும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் போட்டி குறையும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, குடும்பம் முன்னேற்ற பாதையில் செல்லும். தொலைதூர பயணங்களில் கவனம் தேவை. திருமண முயற்சி கைகூடும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, உங்களால் மற்றவர்கள் பயனடைவர். பெற்றோர் நலனில் அக்கறைகொள்ளவும். யாரையும் பகைத்துக் கொள்ள முடியும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, மன குழப்பங்கள் நீங்கும். எதிர்பாராத மருத்துவ செலவுகள் வரும். விட்டு கொடுக்கும் மனப்பான்மை இருக்கும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும்.
Image crdits: Freepik