இன்றைய ராசி பலன் அறிந்துகொள்வதன் மூலம் நீங்க எந்த விஷயங்களில் கவனம் செலுத்தலாம், எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய விஷயங்கள் என்ன, என்ன செய்யலாம் என்பதை அறிந்து கொள்ள முடியும். உங்களுக்கான ராசி பலன்களை துல்லியமாக கணித்து சொல்கிறார் அஸ்ட்ரோ வெ. பழனியப்பன் (9942162388) கோபிசெட்டிப்பாளையம்.
சோபகிருது வருடம் பங்குனி மாதம் 9ம் தேதி 22-03-2024 வெள்ளிக்கிழமை.
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே,சுப விரைய சிலவுகள் உண்டாகும். வேண்டியவர்களுக்கு உதவி செய்வதால் உற்சாகம் ஏற்படும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
ரிஷபம்
ரிஷப ராசி நண்பர்களே, வதந்திகள், விமர்சனங்களை பொருட்படுத்த வேண்டாம்.கணவன் மனைவிக்குள் விவாதங்கள் தவிர்க்கவும். ஆன்மீக ஆர்வம் கூடும். நீண்ட நாள் சிக்கல்கள் குறையும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களே, சேமிப்பை உயர்த்தும் எண்ணம் வரும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். மன போராட்டங்கள் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் சிறக்கும்.
கடகம்.
கடக ராசி நண்பர்களே, எதையும் வெளிப்படையாக பேசுவது நல்லது. பிராத்தனைகள் நிறைவேறும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் வரலாம். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே, அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பழகுவர். தான, தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனக்குழப்பம் காணப்படும்.
கன்னி
கன்னி ராசி நண்பர்களே, புது விருந்தினர்களின் வருகை இருக்கும். பிடிவாத போக்கை தளர்த்தி கொள்ளவும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்யோக மாற்றம் ஏற்படும்.
துலாம்
துலாம் ராசி நண்பர்களே, குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே, மனதில் எண்ணிய காரியங்கள் கைகூடும். உடல் சோர்வு அவ்வப்போது வந்து போகும். கடன் பிரச்சனை தலைதூக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.
தனுசு
தனுசு ராசி நண்பர்களே, தடைப்பட்ட காரியம் மீண்டும் நடை பெறும். விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். வரவுக்கு மீறிய செலவுகள் வரும். தொழில், வியாபாரத்தில் மந்தநிலை காணப்படும்.சந்திராஷ்டமம் நீடிப்பதால் கவனமும் நிதனமும் அவசியம்.
மகரம்
மகர ராசி நண்பர்களே, சொந்த பந்தங்கள் மத்தியில் மதிப்பு உயரும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.
கும்பம்
கும்ப ராசி நண்பர்களே, மனதில் தோன்றியதை உடனடியாக செய்ய முடியும். சுபகாரியப் பேச்சுகள் வெற்றியடையும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
மீனம்
மீன ராசி நண்பர்களே, குடும்பத்தில் சுக வாழ்வு ஏற்படும். பெற்றோர்கள் கேட்டதை செய்து தர இயலும். நட்பு வழியில் சில இடையூறுகள் வரும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.
Image credits: Freepik






